அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த கேப்டன்!

ஹாமில்டன் மசகாட்சா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக 209 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5658 ரன்கள் எடுத்துள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 4:29 PM IST
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த கேப்டன்!
ஹாமில்டன் மசகாட்சா
Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 4:29 PM IST
ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாமில்டன் மசகாட்சா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் - ஜிம்பாவே அணிகள் மோதும் டி20 முத்தரப்பு தொடர் வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. வங்கதேசத்தில் நடக்கும் இந்த முத்தரப்பு தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக ஹாமில்டன் மசகாட்சா அறிவித்துள்ளார். இதனை ஜிம்பாவே கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளது.

ஹாமில்டன் மசகாட்சா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாவே அணிக்காக 209 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5658 ரன்கள் எடுத்துள்ளார். 62 டி20 போட்டிகளில் விளைாயடி 1529 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 119 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Loading...கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய ஹாமில்டன் மசகாட்சா, “இது மிகவும் கடினமான முடிவு தான். என்னுடைய அணிக்காக ஆடியதும், அணிக்கு கேப்டனாக இருந்ததும் பெருமையளிக்கிறது“ என்று தெரிவித்தார்.

Also Watch

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...