ஹர்திக் பாண்டியாவிற்கு தக்க பதிலடி கொடுத்த ஜாகீர் கான்!

ஹர்திக் பாண்டியாவிற்கு தக்க பதிலடி கொடுத்த ஜாகீர் கான்!
ஹர்டிக் பாண்டியா - ஜாகீர் கான்
  • Share this:
தனது பிறந்தநாளிற்கு கேலியாக வாழ்த்திய ஹர்திக் பாண்டியாவிற்கு ஜாகீர் கான் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 2003, 2011 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார். 2011 உலகக் கோப்பை தொடரில் 21 விக்கெட்களை ஜாகீர் கான் வீழ்த்தினார். இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய ஜாகீர் கான் 92 டெஸ்ட்டில் 311 விக்கெட்களையும் 200 ஒரு நாள் போட்டிகளில் 282 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

ஜாகீர் கானின் 41வது பிறந்த நாளான இன்று கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜாகீர் கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் பாராட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


ட்விட்டரில் வீடியோ ஒன்றுடன் தனது கருத்தை பாண்டியா பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ளூர் போட்டி ஒன்றில் ஜாகீர் கான் பந்துவீச்சை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு விளாசுவார். மேலும் “பிறந்த நாள் வாழ்த்துகள் ஜாகீர் கான்.. இந்த அதிரடியான ஷாட் போன்று கொண்டாடுங்கள்“ என்றுள்ளார்.பாண்டியாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் கொந்தளித்து உள்ளனர். பாண்டியாவை விமர்ச்சித்தும் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பாண்டியாவின் ட்விட்டை பார்த்த ஜாகீர் கான் அதற்கு பதிலளித்துள்ளார். “உங்களின் வாழ்த்துக்கு நன்றி பாண்டியா. உங்கள் அளவுக்கு எனக்கு பேட்டிங் திறமை இல்லை. ஆனால் எனது பிறந்த நாள், இதே போட்டியில் நீங்கள் சந்தித்த எனது அடுத்த பந்தைப் போன்று சிறப்பாக இருந்தது” என்றார்.பாண்டியாவின் கேலியான பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ட்விட் இருந்ததாக ரசிகர்கள் ஜாகீர் கானை பாராட்டி உள்ளனர்.

Also Watch : உலகநாடுகள் இந்திய விளையாட்டுத் துறையின்வளர்ச்சியில் கைகோர்க்கவேண்டும்

First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்