முகப்பு /செய்தி /விளையாட்டு / மனைவி தனாஸ்ரீ உடன் விவாகரத்தா? மௌனம் கலைத்த சஹால்

மனைவி தனாஸ்ரீ உடன் விவாகரத்தா? மௌனம் கலைத்த சஹால்

தனாஸ்ரீ - யுஸ்வேந்திர சஹல் -

தனாஸ்ரீ - யுஸ்வேந்திர சஹல் -

சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் விவாகரத்தாகப்போகிறது என்பன போன்ற வதந்திகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்திய அணியின் சுழற்பந்து பவுலர் யுஸ்வேந்திர சஹலுக்கும் அவர் மனைவி தனாஸ்ரீக்கும் கடந்த 2020 டிசம்பரில் திருமணம் நடந்தது. இருவரும் அவ்வப்போது தங்களது வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இந்த தம்பதியனர் சமூக வளைதலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.

ஆனால் சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ உள்ளனர்ன போன்ற வதந்திகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டன. தனாஸ்ரீ தன் சமூக வளைதலப்பக்கத்தில் சஹால் என்ற கடைசி பெயரை நீக்கிய போன்ற சம்பவங்களால் இந்த தகவல் மிகவும் பேசப்பட்டது.

Also Read : இங்கிலாந்து தோல்வி: வாசிம் ஜாஃபர் செம கிண்டல்

தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் பணிவாக கேட்டுக்கொள்கிறேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே தனாஸ்ரீ ஒரு நடன இயக்குனரும் யூடியூபரும் ஆவார். அதே நேரம் யுஸ்வேந்திர சஹல் இந்திய அணியில் முக்கியமான பவுலருமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Divorce, Indian cricket team, Yuzvendra chahal