ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘எதிரணிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தக் கூடியவர் சாஹல்’ – தினேஷ் கார்த்திக் பாராட்டு

‘எதிரணிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தக் கூடியவர் சாஹல்’ – தினேஷ் கார்த்திக் பாராட்டு

யுஸ்வேந்திர சாஹல்

யுஸ்வேந்திர சாஹல்

இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணியில் சாஹல் இடம்பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எதிரணிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வல்லவர் என்று, தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணி 2022-ல் சில சறுக்கல்களை கடைசி மாதங்களில் சந்தித்தது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியால் பங்கேற்க முடியவில்லை. உலகக் கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியுடன் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

அதிலும் குறிப்பாக அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் அவர் ஆடும் லெவனில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஒருவேளை அவருக்கு சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சாஹல் குறித்து இந்திய அணியின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் பாராட்டி பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- சாஹல் ஒரு அபாயகரமான ஆட்டக்காரர். அவரால் எதிரணிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடியும். உலகக்கோப்பை டி20 தொடரில் அவர் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு அட்வான்டேஜாக அமைந்திருக்கும். இந்த தொடரில் அஷ்வின் சிறப்பாக ஆடினார். ஆனால் கடைசி சில மேட்ச்சுகள் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணியில் சாஹல் இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி – 

ரிஷப் பந்த்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை… அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார்.

‘ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் தொடக்க வீரராக விளையாட வேண்டும்’ – கவுதம் காம்பீர் வலியுறுத்தல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி –  

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (வி.சி), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

First published:

Tags: Cricket