யுவ்ராஜ் சிங், யூசுப் பதான் விளாசல்; இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய லெஜண்ட்ஸ்
யுவ்ராஜ் சிங், யூசுப் பதான் விளாசல்; இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய லெஜண்ட்ஸ்
யுவ்ராஜ்- யூசுப் பத்தான்.
முதலில் பேட் செய்த இந்திய லெஜன்ஸ்ட் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இலங்கை லெஜண்ட்ஸ் 167/7என்று முடிந்தது. இதன் மூலம் இந்திய லெஜண்ட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
ராய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற ரோடு சேஃப்டி டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை இந்திய லெஜண்ட்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
முதலில் பேட் செய்த இந்திய லெஜன்ஸ்ட் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இலங்கை லெஜண்ட்ஸ் 167/7என்று முடிந்தது. இதன் மூலம் இந்திய லெஜண்ட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய லெஜண்ட்ஸ் அணியில் யுவராஜ் சிங் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 60 ரன்களை விளாச, யூசுப் பத்தான் 36 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 62 நாட் அவுட்.
182 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இலங்கையின் அதிரடி லெஜண்ட்களான தில்ஷன், சனத் ஜெயசூரியா இறங்கினர். இருவரும் 7.2 ஓவர்களில் 62 ரன்கள் விளாசினர், அப்போது தில்ஷன் 21 ரன்களில் யூசுப் பத்தானிடம் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் ஆனார். 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த ஜெயசூர்யாவை யூசுப் பத்தான் எல்.பி. ஆக்க இலங்கை அணி 11 ஓவர்களில் 83/3 என்று ஆனது.
இடையே சமர சில்வாவை இர்பான் பத்தான் காலி செய்தார். உபுல்தரங்காவையும் இர்பான் வீழ்த்த 91/4 என்று இலங்கை தடுமாறியது. அப்போது சிந்தகா ஜெயசிங்கே (40), கவுஷல்யா வீரரத்னே இறங்கி சிலபல அதிரடிகளைக் காட்டினர். 18.4 ஓவர்களில் ஸ்கோர் 155 ரன்களை எட்டியது. அப்போது வீரரத்னே கோனி பந்தில் வெளியேற ஜெயசிங்கே ரன் அவுட் ஆக மஹரூப் டக் அவுட் ஆக இலங்கை அணி 167/7 என்று தோல்வியடைந்தது. இந்திய அணியில் இர்பான் பத்தான், யூசுப் பத்தான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தியா பேட் செய்த போது சேவாக் வழக்கத்துக்கு மாறாஅக் 12 பந்துகளில் 1 சிக்சருடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் 23 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து மஹரூஃப் பந்தில் வெளியேறினார்.
அதன் பிறகு யுவராஜ், யூசுப் பத்தான் மட்டையிலிருந்து பவுண்டரிகளும் சிக்சர்களும் பறந்தன. மீடியம் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் குலசேகரா, தம்மிக பிரசாத்திடம் இருவரும் கடுமை காட்டி அடித்து நொறுக்கினர். தம்மிகவின் ஒரு ஓவரில் விளாசப்பட்டது. யூசுப் பத்தான் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசினார்.
யுவராஜ் சிங் தூக்கி அடித்து பவுண்டரிக்கு பந்தை விரட்டி அரைசதம் எடுத்தார். இருவரும் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார்கள், பவர் ஹிட்டிங் இலங்கையை புரட்டிப் போட்டது. இருவரும் 47 பந்துகளில் 85 ரன்கள் விளாசினர். ஆட்ட நாயகன் யூசுப் பத்தான், தொடர் நாயகன் திலகரத்னே தில்ஷன்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.