இதல்லவா கேட்ச்... இதுக்கு தான் யுவ்ராஜ் சிங் வேணும்னு சொல்றது...!

இந்தப் போட்டியில் 21 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார் யுவ்ராஜ் சிங்

news18
Updated: August 5, 2019, 4:58 PM IST
இதல்லவா கேட்ச்... இதுக்கு தான் யுவ்ராஜ் சிங் வேணும்னு சொல்றது...!
யுவ்ராஜ் சிங்
news18
Updated: August 5, 2019, 4:58 PM IST
குளோபல் டி20 தொடரில் யுவ்ராஜ் சிங் பிடித்த கேட்ச் சமூக வைதளங்களில் வைரலாகி உள்ளது.

குளோபல் டி20 தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்கள் விளையாடி வருகின்றனர். கிறிஸ் கெயில், யுவ்ராஜ் சிங், டூ பிள்சில் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

டொரெண்டோ நேஷணல்ஸ் - ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் அணிகள் மோதிய போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.. டாஸ் வென்ற டொரெண்டோ நேஷணல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் அணி 20 ஓவரில் 222 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சே 66 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து விளையடிய டொரெண்டோ நேஷணல்ஸ் அணியினர் சிறப்பான தொடக்கத்தை அளித்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். சிறப்பாக விளையாடிய யுவ்ராஜ் சிங் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டு 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே நவாஜ் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக டொரெண்டோ நேஷணல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்களை மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் 3.2-வது ஓவரில் ஜெரமி கார்டன் வீசிய பந்தில் யுவ்ராஜ் சிங்கிடம் கேட்ச் கொடுத்து சிம்மன்ஸ் விக்கெட்டை இழந்தார். இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலானது.இந்தப் போடியில் யுவ்ராஜ் சிங் 51 ரன்கள், 1 விக்கெட், 2 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

Also watch

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...