குளோபல் டி20 தொடர்: மரண மாஸ் காட்டிய யுவ்ராஜ் சிங்

இறுதியாக டொரெண்டோ நேஷணல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்களை மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

news18
Updated: August 4, 2019, 1:53 PM IST
குளோபல் டி20 தொடர்: மரண மாஸ் காட்டிய யுவ்ராஜ் சிங்
யுவ்ராஜ் சிங்
news18
Updated: August 4, 2019, 1:53 PM IST
குளோபல் டி20 தொடரில் 21 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார் யுவ்ராஜ் சிங்.

குளோபல் டி20 தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்கள் விளையாடி வருகின்றனர். கிறிஸ் கெயில், யுவ்ராஜ் சிங், டூ பிள்சில் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

நேற்று டொரெண்டோ நேஷணல்ஸ் - ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டொரெண்டோ நேஷணல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ப்ராம்ப்டன் வுல்வ்ஸ் அணி 20 ஓவரில் 222 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சே 66 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து விளையடிய டொரெண்டோ நேஷணல்ஸ் அணியினர் சிறப்பான தொடக்கத்தை அளித்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். சிறப்பாக விளையாடிய யுவ்ராஜ் சிங் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டு 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே நவாஜ் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக டொரெண்டோ நேஷணல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்களை மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போடியில் யுவ்ராஜ் சிங் 51 ரன்கள், 1 விக்கெட், 2 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

Also watch

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...