• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஸ்டைலிஷ் யுவ்ராஜ்- பேட்டிங் ஸ்டைல் மட்டுமல்ல ஹேர் ஸ்டைலிலும்தான் - நியூலுக்கில் யுவ்ராஜ்

ஸ்டைலிஷ் யுவ்ராஜ்- பேட்டிங் ஸ்டைல் மட்டுமல்ல ஹேர் ஸ்டைலிலும்தான் - நியூலுக்கில் யுவ்ராஜ்

நியூ லுக் யுவ்ராஜ்.

நியூ லுக் யுவ்ராஜ்.

பேட்டிங் ஸ்டைலில் கவனம் செலுத்தும் யுவ்ராஜ் சிங், தன் தோற்றத்திலும் புதிய கவனமேற்கொண்டு வருகிறார். இந்திய கிரிக்கெட்டில் விதம் விதமான ஹேர்ஸ்டைலில் வலம் வந்தவர் தல தோனி. நீள் முடி முதல், மொட்டைத்தலை வரையிலும் அரைமண்டை கிராப் முதல் முக்கால் மண்டை கிராப் வரை அனைத்தையும் தோனி செய்து பார்த்து விட்டார்.

  • Share this:
    யுவராஜ் சிங் இன்னமும் கூட பவர் ஹிட்டிங்கில் தாதாவாக இருக்கிறார் என்று இன்னொரு பவர் ஹிட்டிங் பேட்ஸ்மென் யூசுப் பத்தான் கூறியிருந்தார். ரோடு சேப்டி தொடரில் பிரமாதமாக ஆடினார் யுவ்ராஜ் சிங்.

    பேட்டிங் ஸ்டைலில் கவனம் செலுத்தும் யுவ்ராஜ் சிங், தன் தோற்றத்திலும் புதிய கவனமேற்கொண்டு வருகிறார். இந்திய கிரிக்கெட்டில் விதம் விதமான ஹேர்ஸ்டைலில் வலம் வந்தவர் தல தோனி. நீள் முடி முதல், மொட்டைத்தலை வரையிலும் அரைமண்டை கிராப் முதல் முக்கால் மண்டை கிராப் வரை அனைத்தையும் தோனி செய்து பார்த்து விட்டார்.

    அவருக்கு அடுத்ததாக பேட்டிங் ஸ்டைல் மட்டுமல்ல ஹேர்ஸ்டைலிலும், ஆட்டத்தில் மட்டுமல்ல தோற்றத்திலும் கவனம் செலுத்துபவர் யுவ்ராஜ் சிங்.



    இந்நிலையில் நெற்றியின் இடது புறத்தில் சரிந்து விழும் பின்மண்டையில் கழுத்து வரை தொங்கும் முடியுடன் கலக்கும் யுவ்ராஜ் சிங்கின் ஹேர்ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஷிகர் தவான், இர்பான் பத்தான் யுவராஜ் சிங்கின் புதிய ஸ்டைலை வரவேற்றுள்ளனர்.

    யுவராஜுக்கு இந்த புதிய ஹேர்ஸ்டைலை வடிவமைத்தவர் பிரபல சிகையலங்கார நிபுணர் அலைம் ஹகீம். பொதுவாக பாகிஸ்தான் வீரர்கள்தான் ஹேர்ஸ்டைலில் அசத்தக் கூடியவர்கள். உலகின் அதிபாஷன் ஹேர்ஸ்டைல் முதலில் எட்டிப்பார்ப்பது பாகிஸ்தான் வீரர்களிடம்தான், ஷாகித் அஃப்ரீடி, வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர். ஆரம்பத்தில் இம்ரான் கான், சிகந்தர் பக்த், சலீம் ஜாஃபர். போன்றோர் சிகையலங்காரம் செய்து கொள்வதில் விருப்பமுடையவர்கள்.

    இப்போது அதே வழியில் யுவ்ராஜ் சிங் தான் பேட்டிங் ஸ்டைலிஸ்ட் மட்டுமல்ல ஹேர்ஸ்டைலிஸ்டும்தான் என்று முழங்குகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: