“கங்குலி உறுதுணையாக இருந்தது போல் தோனியும், கோலியும் இல்லை“ - யுவராஜ்சிங் வருத்தம்

“கங்குலி உறுதுணையாக இருந்தது போல் தோனியும், கோலியும் இல்லை“ - யுவராஜ்சிங் வருத்தம்
யுவராஜ் சிங் - கங்குலி
  • Share this:
கங்குலி எனக்கு உறுதுணையாக இருந்தது போல் தோனியும், கோலியும் இல்லை என்று யுவராஜ் சிங் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் யுவராஜ் சிங் கடந்த 2010ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய வீரராக இருந்தார்.

யுவராஜ் சிங், ஸ்போர்ட்ஸ் ஸ்டார்க்கு கொடுத்த பேட்டி ஒன்றில், “சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்த போது விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. அதன்பின் கேப்டன் பொறுப்பு தோனி வசம் சென்றது.


சிறந்த கேப்டன் தோனியா, கங்குலியா என்று கேட்டால் அதற்கு பதிலளிப்பது சிரமம். ஆனால் கங்குலி எனக்கு உறுதுணையாக இருந்தது போல் தோனி, விராட் கோலி இல்லை“ என்றார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம். 
First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading