கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது ஏன்? ஒரு வருடத்திற்கு பின் மனம் திறந்த யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் ஓய்வு அறிவித்தது ஏன் என்று ஒரு வருடத்திற்கு பின் யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  2011 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய வீரராக இருந்தவர் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார்.

  யுவராஜ் ஓய்வு அறிவித்து ஓராண்டுக்கு பின் அதற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார். கருவ் கபூருடன் அவர் நடத்திய உரையாடலின் போது, “நீங்கள் வாழ்க்கையில் வேகமாக பயணித்து கொண்டிருக்கும் போது பல விஷயங்களை உணர்ந்திருக்க மாட்டீர்கள். திடீரென 2 - 3 மாதங்கள் நான் வீட்டிலேயே இருந்தேன். அதற்கு பல காரணங்கள் இருந்தது. கிரிக்கெட் எனக்கு மனரீதியாக உதவாதபோது நான் ஒரு கட்டத்திற்கு வந்தேன். ஆனால் நான் எப்போதும் கிரிக்கெட் விளையாட விரும்பினேன்.

  ஒரு கட்டத்தில் ஓய்வை அறிவிக்க நான் தள்ளப்பட்டேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும், நான் ஓய்வு பெற வேண்டுமா, வேறு சீசனில் விளையாடலமா என்று பல விதமான கேள்விகள் என் மனதில் எழுந்தது. பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளேன். எல்லாவற்றிக்கும் மேலாக விளையாட்டு எனக்கு வழங்கிய மரியாதை.

  நான் அந்த மரியாதையை 20 ஆண்டுகளாக அனுபவித்து மகிழ்ச்சியடைந்தேன். இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். எனவே நான் ஓய்வு பெற்ற நாள் முதல் சுதந்திரமாக இருக்கிறேன் என்று நினைத்தேன்.

  அது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். என்னால் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக நான் ஓய்வு அறிவித்த பின் மனரீதியாக மிகவும் சுதந்திரமாக இருக்கிறேன். நான் பல ஆண்டுகளாக தூங்கவில்லை, நன்றாக தூங்க முயற்சித்தேன்“ என்றார்.
  Published by:Vijay R
  First published: