டி20 போட்டியில் 3 வீரர்கள் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காட்டுத் தீ நிவாரண கிரிக்கெட் போட்டியிலும் யுவராஜ் சிங் பங்கேற்று விளையாடினார்.
மேலும் டி20 போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதமடித்த சாதனையும் யுவராஜ் சிங் பெற்றுள்ளார். இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய போது, டி20 போட்டியில் சாத்தியமில்லை என்பது எதுவுமில்லை. இரட்டை சதம் அடிப்பது என்பது சவலான ஒன்று தான். ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் இவர்கள் மூவரும் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது“ என்றுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.