Home /News /sports /

Yuvraj Singh | என் கழுத்தைத் திருகி எறிவேன் என்றார் பிளிண்டாஃப்: 6 சிக்சர்களின் பின்னணிக் கோபம் - யுவராஜ் சிங் மனம் திறப்பு

Yuvraj Singh | என் கழுத்தைத் திருகி எறிவேன் என்றார் பிளிண்டாஃப்: 6 சிக்சர்களின் பின்னணிக் கோபம் - யுவராஜ் சிங் மனம் திறப்பு

யுவ்ராஜ் சிங், பிளின்ண்டாப், 2007 டி20 உலகக்கோப்பை.

யுவ்ராஜ் சிங், பிளின்ண்டாப், 2007 டி20 உலகக்கோப்பை.

2007 முதல் டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி உலக சாதனை புரிந்த யுவராஜ் சிங் அந்தச் சமயத்தில் தனக்கும் பிளிண்டாஃபுக்கும் இடையே ஏற்பட்ட ‘சீரியசான’ சண்டை குறித்தும் அது எப்படி 6 சிக்சர்களாக மாறியது என்பதையும் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    2007 உலகக் கோப்பை டி20 தொடரில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 6 சிக்சர்களை விளாசி சாதனை படைத்ததோடு 12 பந்துகளில் டி20யில் அரைசதம் அடித்து இன்று வரை அந்தச் சாதனையை வைத்துள்ளார்.

    ஆனால் அப்படிப்பட்ட சாதனையை யுவராஜ் சிங் உருவாக்கக் காரணமாக இருந்தவர் ஆண்ட்ரூ பிளிண்டாப், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கொஞ்சம் ஸ்லெட்ஜிங்கில் கில்லாடி, தன் பந்துகளை அடித்து விட்டால் ஆத்திரமடையக் கூடியவர்.

    அந்தப் போட்டியில் மேலும் இங்கிலாந்து வீரர் டிமிட்ரி மஸ்கரன்ஹாஸ், யுவராஜ் ஓவரில் 5 சிக்சர்களை ஒரே ஓவரில் அடித்ததும் யுவராஜுக்கு கடும் கடுப்பேற்றியிருந்தது.

    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு பிளிண்டாபுக்கும் நடந்த சண்டையை விவரித்த யுவராஜ் சிங், “பிளிண்டாப் ஓவரில் இரண்டு நல்ல பவுண்டரிகளை அடித்தேன். அது அவரைக் கடுப்பேற்றியது. அவர் என்னிடம் ஏதோ கூறினார், நானும் திருப்பிக் கொடுத்தேன். அவர் என்னைப் பார்த்து, ‘இங்கே வா உன் கழுத்தைத் திருகி எறிகிறேன் என்றார், நான் என்ன சொன்னேன் என்றால் ‘என் பேட் எங்கெல்லாம் போகும் என்பதும் உனக்குத் தெரியும்’ என்றேன்.

    மிகவும் சீரியஸான சண்டை அது. அப்போது எனக்கு ஒவ்வொரு பந்தையும் மைதானத்துக்கு வெளியே அடிக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது. பிராட் வீசிய முதல் பந்து அதிர்ஷ்டகரமாக மைதானத்தை விட்டு பறந்தது. 2வது பந்து ரசிகர்கள் மத்தியில் போய் விழுந்தது. 3வது பந்து பாயிண்டில் சிக்ஸ். நான் அந்த இடத்தில் என் வாழ்நாளில் பவுண்டரி கூட அடித்ததில்லை.



    காலிங்வுட் வந்து பிராடிடம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே யார்க்கர் போடுமாறு சொன்னார். ஆனால் பிராட் என் கால்களுக்கு வீசினார். அப்போது புரிந்தது பிராட் சிக்கலில் இருக்கிறார் என்பது. 5வது பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு மைதானத்தின் சிறிய பகுதியில் பிளிண்டாஃப் தலைக்கு மேல் சிக்ஸ். 6வது பந்து நிச்சயம் யார்க்கராகவே இருக்கும் என்று எதிர்பார்த்தேன். எனவே அதனை நேராகத் தூக்க முடிவு செய்தேன். 6வது சிக்சை அடித்து முடித்து பிளிண்டாபைப் பார்த்து குறும்பாகச் சிரித்தேன்” என்றார் யுவராஜ் சிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்படியாக பிளிண்டாப் கழுத்தை அறுத்து தூக்கி வீசுவேன் என்று கூறியது யுவராஜ் சிங்கின் கோபத்துக்குக் காரணமாகி கடைசியில் பிராட் சிக்கிக் கொண்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Sixer, T20, Yuvraj singh

    அடுத்த செய்தி