Home /News /sports /

தோனியை எங்கிருந்தோ கேப்டனாக்கினார்கள், அதுபோல்தான் - அடுத்த டெஸ்ட் கேப்டனைத் தேர்வு செய்யும் யுவராஜ் சிங்

தோனியை எங்கிருந்தோ கேப்டனாக்கினார்கள், அதுபோல்தான் - அடுத்த டெஸ்ட் கேப்டனைத் தேர்வு செய்யும் யுவராஜ் சிங்

தோனி-யுவராஜ் சிங்

தோனி-யுவராஜ் சிங்

இந்தியாவின் வருங்கால டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பந்தை தேர்வுக்குழு ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரும்புகிறார். MS தோனியின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, யுவராஜ், இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த பந்த் தான் சரியான ஆள் என்கிறார்.

மேலும் படிக்கவும் ...
    இந்தியாவின் வருங்கால டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பந்தை தேர்வுக்குழு ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரும்புகிறார். MS தோனியின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, யுவராஜ், இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த பந்த் தான் சரியான ஆள் என்கிறார்.

    இப்போது 3 வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் ரோஹித் சர்மா, ஆனால் விராட் கோலியைக் கேப்டன்சியை விட்டுத் தூக்க முடிவெடுத்த போது 3 வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் என்ற விவகாரத்திலிருந்து விடுபட விரும்புகிறோம் என்று கோலிக்கு சாக்கு கூறியது தேர்வுக்குழு, ஆனால் இப்போது ரோஹித் சர்மா 3 வடிவங்களுக்குமான கேப்டனாக இருந்து வருகிறார்!!

    இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த யுவராஜ் சிங் ரிஷப் பண்ட்டைக் கேப்டனாக்க வேண்டும் என்று கூறும்போது, “நீங்கள் யாரையாவது தயார் செய்ய வேண்டும். தோனி கேப்டனானது எப்படி, எங்கிருந்தோ அவரைக் கேப்டனாக்கினார்கள்.. அதன் பிறகு அவர் ஒரு சிறந்த கேப்டனாக வளர்ச்சியடையவில்லையா? ஆனால் அதே போல் ரிஷப் பண்ட்டைக் கேப்டனாக்குங்கள், வாய்ப்பு கொடுங்கள், 6 மாதம் அவரை ஃப்ரீயாக விடுங்கள், காலப்போக்கில் ரிஷப் பண்ட்டும் முதிர்ச்சி பெறுவார்.

    "எதிர்கால கேப்டனாக இருக்கக்கூடிய ஒரு இளைஞனை நீங்கள் தேர்ந்தெடுத்து, அவருக்கு நேரம் கொடுங்கள், முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் அற்புதங்களை எதிர்பார்க்க வேண்டாம். வேலையை திறம்படச் செய்ய நீங்கள் இளையவர்களை நம்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”

    பண்ட் முதிர்ச்சியடையவில்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். நான் கூட அவர் வயதில் முதிர்ச்சியில்லாமல் இருந்தேன், விராட் கோலி கூட கேப்டனாகும் போது முதிர்ச்சியற்றவராகத்தான் இருந்தார். ஆனால் பண்ட் காலப்போக்கில் முதிர்ச்சியடைந்து வருகிறார். ஆதரவு ஊழியர்கள் இதைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் டெஸ்ட் அணியை வழிநடத்த சரியானவர் என்று நான் நினைக்கிறேன்.

    உங்களிடம் ஏற்கனவே நான்கு டெஸ்ட் சதங்கள் உள்ளன. சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைப் பொறுத்தவரை, ரிஷப் எதிர்கால ஜாம்பவான் என்று நான் பார்க்கிறேன், ”என்று யுவராஜ் கூறினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dhoni, IPL 2022, Rishabh pant, Yuvraj singh

    அடுத்த செய்தி