• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Yuvraj Singh | யுவராஜ் சிங் திடீர் கைது- சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு

Yuvraj Singh | யுவராஜ் சிங் திடீர் கைது- சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு

யுவ்ராஜ் சிங்.

யுவ்ராஜ் சிங்.

2011 உலகக்கோப்பை நாயகன், கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கை நேற்று ஹரியானா போலீஸ் கைது செய்து பிறகு ஜாமீனில் விடுவித்தது.

  • Share this:
    கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இன்னொரு கிரிக்கெட் வீரர் குறித்து சாதி ரீதியான கருத்துகளை தெரிவித்ததையடுத்து வழக்கு நிலுவையில் இருந்தது, இதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவினால் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு சிறிது நேரம் சிறையில் வைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஹன்சி நிடிகா காலவ்த் தொலைபேசியில் நியூஸ் 18 சேனலுக்குக் கூறும்போது, “சட்ட ரீதியாக கைது செய்தோம், பிறகு ஹரியாணா மற்றும் பஞ்சாப் கோர்ட் உத்தரவுகளின் பேரில் அவரை ஜாமீனில் விடுவித்தோம். சனிக்கிழமையன்று ஹன்சிக்கு யுவராஜ் வந்த போது கைது செய்தோம். சில மணி நேரங்களில் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தோம்” என்றார்.

    இது தொடர்பான கோர்ட் உத்தரவு என்னவெனில் யுவராஜ் சிங்கை கைது செய்தாலும் சில மணி நேரங்களில் அவரை உறுதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்பதே. வழக்கறிஞர் ரஜத் கல்சான் என்பவர்தான் யுவராஜ் மீது இந்த வழக்கை எஸ்.சி/எஸ்டி அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தார்.

    “அதாவது யுவராஜ் சிங்கின் கருத்து தலித் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டது.” என்று வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார், ஆனால் இதனையடுத்தே யுவராஜ் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், “நான் என் நண்பர்களுடன் உரையாடிய போது நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். இது தேவையற்றது. ஆனால் ஒரு பொறுப்புள்ள இந்தியனாக என் கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று மன்னிப்பு கேட்டிருந்தார்.

    Also Read: டி20 உலகக் கோப்பைத் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து- நியூ கினியாவை வீழ்த்திய ஓமன்

    இந்த விவகாரம் தேவையில்லாமல் ஊதிப்பெருக்கப்பட்டதாக அப்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் யுவராஜ் சிங் பணிமுறை நிமித்தமாக கைது செய்யப்பட்டு சொந்த பத்திரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: