சாஹலை சாதிய ரீதியில் இழிவுப்படுத்திய புகார் : வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலை சாதிய ரீதியில் இழிவுப்படுத்திய விவகாரத்தில் யுவராஜ் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சாஹலை சாதிய ரீதியில் இழிவுப்படுத்திய புகார் : வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரிரு நாட்களுக்கு முன்னர் ரோஹித் சர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது சாஹலின் டிக் டாக் வீடியோக்களை கேலி செய்யும் விதமாக பேசும் போது தவறுதலாக அவரை சாதிய ரீதியில் பேசியதாக விமர்சனம் எழுந்தது.

வட இந்தியாவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை குறிப்பிடும் சொல்லை யுவராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து யுவராஜ் சிங் சாதிய ரீதியில் பேசியதாக தலித் உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரஜத் கல்சன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் தான் யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சாதி, மதம் ஆகியவற்றை தான் ஒரு போதும் நம்பியதில்லை. என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.


மக்களின் நலனுக்காக என் வாழ்நாளை செலவிட்டு வருகிறேன். எந்த ஒரு தனிநபரையும் பராபட்சமின்றி மதிக்கிறேன். இருப்பினும் பொறுப்புள்ள இந்தியனாக என்னை அறியாமல் நான் யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading