ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கிரெக் சாப்பாலா சச்சினா? என்ற மோதலில் இந்தியா கேப்டன்சி வாய்ப்பை தோனியிடம் இழந்தேன் - யுவராஜ் சிங்

கிரெக் சாப்பாலா சச்சினா? என்ற மோதலில் இந்தியா கேப்டன்சி வாய்ப்பை தோனியிடம் இழந்தேன் - யுவராஜ் சிங்

யுவ்ராஜ் சிங்

யுவ்ராஜ் சிங்

துணை கேப்டன் பொறுப்பிலிருந்து திடீரென நான் நீக்கப்பட்டேன். சேவாக் டீமில் இல்லை. எனவே எங்கிருந்தோ மாஹி (தோனி) கேப்டனாக்கப்பட்டார். 2007 உலகக்கோப்பை டி20க்கு நான் தான் கேப்டனாக இருப்பேன் என்று நினைத்தேன்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005 முதல் 2007 ஐசிசி உலகக்கோப்பை வரை நீடித்த ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல் காலக்கட்டம் இந்திய அணிக்கு சோதனையான காலக்கட்டமாகக் காட்டப்பட்டது. அந்த கோரஸில் இப்போது யுவராஜ் சிங்கும் இணைந்துள்ளார், இதில் சச்சினா, கிரெக் சாப்பலா என்ற மோதலில் தான் சச்சின் பக்கம் நின்றதால் இந்திய அணியின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் கேப்டனாகும் வாய்ப்பு பறிக்கப்பட்டதாகவும் தோனிக்கு அடித்தது லக்கி பிரைஸ் என்றும் கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

  ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்கு சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் உரையாடி வரும் யுவராஜ் சிங், பல உள்குத்துகளை அம்பலப்படுத்தி வருகிறார், இதில் இவரது தரப்பு மட்டும் தெரிகிறது, இன்னொரு தரப்பு என்னவென்று வெளியில் வந்தால்தான் யுவராஜ் கூறுவதில் எத்தனை உண்மை, எத்தனை அவரது புரிதல் என்பது தெரியவரும்.

  கிரெக் சாப்பல் காலக்கட்டத்தில்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, மொகமட் கைஃப், ரெய்னா, தோனி, தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ரிதீந்தர் சிங் சோதி, இன்னபிற வீரர்கள் என்று கூற முடியும், அந்த ஒன் டவுன் என்ற இடத்தை பரிசோதனைக்கான இடமாக வைத்து அதை சுழற்சி முறையில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தினார் கிரெக் சாப்பல், அப்போதுதான் சச்சின் டெண்டுல்கரை டெஸ்ட் மேட்ச் போல் 4ம் நிலையில் இறங்க வேண்டும் என்று கிரெக் சாப்பல் விரும்பினார். அதாவது சச்சின் ஆட்டமிழந்து விட்டால் அணி திண்டாடுகிறது எதிர் அணியும் சச்சின் போய்விட்டார், இனி இந்தியாவை காலி செய்யலாம் என்று உத்வேகம் பெறுகின்றனர். தொடக்கத்தில் இறங்கி சச்சின் சதங்களாக அடித்து வந்த நேரம் என்பதால் எதற்கு அதை டிஸ்டர்ப் செய்ய வேண்டும் என்பதே பலரது வாதம், ஆனால் அணியை கட்டமைத்து மேலே கொண்டு வர கிரெக் சாப்பல், சச்சின் 4ம் நிலையில் இறங்கி இளம் வீரர்களை வழிநடத்தி அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல ஆட வேண்டும், அவர் தொடக்கத்தில் இறங்கி சதம் எடுத்து ஆட்டமிழந்த பிறகும் கூட அணி தோற்கிறது, இது கூடாது என்று விரும்பினார் கிரெக் சாப்பல்.

  எனவே சச்சின் 4ம் நிலையில் இறங்கி மேட்ச்களை பினிஷ் செய்து கொடுக்கும் ரோல் எடுக்க வேண்டும் என்று சாப்பல் விரும்பினார், ராகுல் திராவிட் அதை அமல் செய்தார், இது பேக் ஃபயர் ஆகி 2007 உலகக்கோப்பையில் தோற்றோம், ஆனால் உலகக்கோப்பைக்கு முன்னரே கிரெக் சாப்பல், ‘disaster on the cards' என்றார் காரணம் அணியில் சீனியர் ஜூனியர் பிரச்சனை ஏற்பட்டு ராகுல் திராவிட், சாப்பல் ஒருபுறமும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆதரவாளர்கள் இன்னொரு புறம் என்று பிளவுண்டு ராகுல் திராவிடிற்கு அணியின் ஆதரவு இல்லை, ஒத்துழைப்பு இல்லை என்பதை சூசகமாக அவர் தெரிவித்து விட்டார்.

  கிரெக் சாப்பல் - திராவிட் கூட்டணியில்தான் இந்திய அணி 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சேசிங்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது என்பது யாரும் பேசாத விஷயம். யுவராஜ் சிங் வைஸ் கேப்டனாக இருந்தார்.

  இதைத்தான் யுவராஜ் சிங் தற்போது தன் கேப்டன்சி வாய்ப்பு பறிபோனதற்குக் காரணமாகவும் சொல்கிறார்:

  “நான் தான் கேப்டனாகியிருக்க வேண்டும். பிறகு கிரெக் சாப்பல் சம்பவம் நடந்தது. சாப்பலா, சச்சினா என்று இது முற்றி விட்டது. நான் தான் அப்போது சச்சின் டெண்டுல்கரை ஆதரித்தேன். பிசிசிஐ நிர்வாகத்துக்கு இது பிடிக்கவில்லை. அதனால் தான் யாரை வேண்டுமானாலும் கேப்டனாகட்டும் யுவராஜ் ஆகக்கூடாது என்று கூறப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்.

  ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. துணை கேப்டன் பொறுப்பிலிருந்து திடீரென நான் நீக்கப்பட்டேன். சேவாக் டீமில் இல்லை. எனவே எங்கிருந்தோ மாஹி (தோனி) கேப்டனாக்கப்பட்டார். 2007 உலகக்கோப்பை டி20க்கு நான் தான் கேப்டனாக இருப்பேன் என்று நினைத்தேன்.

  விரூ (சேவாக்) மூத்த வீரர், அவர் இங்கிலாந்து தொடரில் இல்லை. ராகுல் திராவிட் கேப்டன் நான் ஒருநாள் அணியின் வைஸ் கேப்டன். எனவே என்னைத்தானே கேப்டனாக்கியிருக்க வேண்டும்? ஆனால் முடிவு எனக்கு எதிராகப் போனது, ஆனால் அதனாலெல்லாம் வருத்தம் ஒன்றுமில்லை. இன்று அதே போல் நடந்தாலும் நான் என் அணி வீரரைத்தான் ஆதரிப்பேன்” என்றார் யுவராஜ் சிங்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Dhoni, Sachin tendulkar, Yuvraj singh