Home /News /sports /

6 சிக்சர்கள் அடித்த தினம்: தன் குழந்தையுடன் கண்டு களித்த யுவராஜ் சிங்

6 சிக்சர்கள் அடித்த தினம்: தன் குழந்தையுடன் கண்டு களித்த யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

12 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் அரைசதம் எடுத்ததை இன்னும் யாரும் பீட் செய்ய முடியவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Punjab, India
ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி20 அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் 2007 டி20 உலகக்கோப்பை சாம்பியன் அணியான தோனி கேப்டன்சி செய்த இந்திய அணியின் முக்கிய வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடை ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய தினம் இன்றைய தினமாகும்.

அதை மறக்க முடியுமா? 12 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் அரைசதம் எடுத்ததை இன்னும் யாரும் பீட் செய்ய முடியவில்லை. யுவராஜின் 6 சிக்சர்களையும் அப்போது வர்ணனையிலிருந்த ரவி சாஸ்திரியின் கம்பீர குரல் வர்ணனையையும் யாரும் மறப்பதற்கில்லை.
ஆண்ட்ரூ பிளிண்டாஃப் சும்மா இல்லாமல் யுவராஜ் சிங்கை சீண்டிப்பார்க்க யுவராஜ் தன் மட்டையினால் பதில் சொன்னார், ஆனால் எய்தவனிருக்க அம்பை நோவது போல் பிராடைப் பிடித்து பின்னி எடுத்து விட்டார் யுவராஜ், இவற்றுக்கெல்லாம் ஆறுதலாக இங்கிலாந்து அந்தப் போட்டியை வெல்வதுதான், ஆனால் அதிலும் சோடைபோனது இங்கிலாந்து.

செப்.19, 2007 அன்று இந்த டி20 உலகக்கோப்பைக்கு முன் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஹெர்ஷல் கிப்ஸ் ஒருநாள் போட்டியில் 6 சிக்சர்களை ஒரே ஓவரில் அடித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தது நீண்ட காலம் நீடிக்கவில்லை. யுவராஜ் அதை சமன் செய்தார், ஆனால் டி20 கிரிக்கெட்டில்.  யுவராஜ் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக தன் குழந்தையுடன் அந்த 6 சிக்சர்களைப் பார்க்கும் வீடியோவை பகிர்ந்து, “இவரை விட்டால் இதைப் பார்க்க வேறு பார்ட்னர் எவரும் உண்டோ” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்:



செப்டம்பர் 19, 2022  அன்று டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரான 218/4 என்ற ஸ்கோரை இந்திய அணி எட்டியது. இங்கிலாந்து தோற்றது. இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி தோனி கோப்பையை வென்றார். யுவராஜ் சிங்கின் 6 சிக்சர்கள் இன்றும் பலராலும் நினைவுகோரப்பட்டு, நெகிழ்ச்சியுடன் அதைப் பற்றி பலரையும் பேசவைத்து வருகிறது.

இதையும் வாசிக்க: விராட் கோலியை நோக்கி ஏகப்பட்ட பவுன்சர்கள்.. சதம் அடித்து மீண்டும் சாதிப்பாரா?
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Cricket, Sixer, Yuvaraj Singh

அடுத்த செய்தி