கிரிக்கெட்டில் மீண்டும் யுவராஜ் சிங்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

யுவராஜ் சிங்

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த போதும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக யுவராஜ் தெரிவித்திருந்தார்

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் அறிவித்தார். இந்திய அணி 2007 டி20, 2011 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த வீரர் யுவராஜ் சிங். ஐபிஎல் தொடரில் தற்போது மும்பை அணிக்காக யுவராஜ் விளையாடினார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த போதும், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கனடாவில் நடைபெற உள்ள க்ளோபல் டி20 போட்டியில் யுவராஜ் விளையாட உள்ளார்.வருகிற ஜூலை 25 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 -ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், டொராண்டோ நேஷ்னல்ஸ் அணியின் சார்பாக யுவராஜ் சிங் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்துவிட்டதால் பிசிசிஐ-ன் விதிமுறைகள் அவருக்குப் பொருந்தாது.
Published by:Vijay R
First published: