மனீஷ் பாண்டே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் செம டான்ஸ் போட்ட யுவராஜ் சிங் - வைரல் வீடியோ

  • Share this:
    மனீஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மனீஷ் பாண்டே நடிகை அஷ்ரிதா ஷெட்டியை கடந்த 2ம் தேதி திருமணம் செய்தார். 32 வயதாகும் மணீஷ் பாண்டே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.    மனீஷ் பாண்டே திருமணத்திற்கு முன்னணி கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கேற்றனர். இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நடனமாடி மகிழ்ந்தார்.
    யுவராஜ் சிங்கின் பஞ்சாபி நடனத்தை அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். யுவராஜ் சிங் நடனம் பலரை கவர்ந்துள்ளது. இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் யுவராஜ் சிங் கனடா டி20 லீக்கில் பங்கேற்று வருகிறார்.
    Published by:Vijay R
    First published: