யுவராஜ் சிங் பிறந்த நாளான இன்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.
யுவராஜ் சிங் தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ் சிங்.
யுவராஜ் சிங்கை பெருமைப்படுத்தும் விதமாக ஐசிசி பதிவிட்டுள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. 2007 டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் தொடர்ந்து 6 சிக்சர்களை விளாசி சாதனை படைத்திருந்தார்.
கிரிக்கெட் ரசிகர்களால் அதிக முறை விரும்பி பார்க்கப்பட்ட இந்த வீடியோவை தான் ஐசிசி பதிவு செய்துள்ளது. யுவராஜ் சிங் குறித்து பிசிசிஐ பதிவிட்டுள்ள கருத்தில் “உண்மையான சாம்பியன் மற்றும் பலருக்கு உத்வேகமாக இருக்கும் யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்துகள்“ என்று பதிவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.