ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிவை நோக்கி செல்கிறதா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் 20 ஓவர் போட்டிகள் வருகைக்கு பின்னர், 50 ஓவர் போட்டிகள் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளன. பந்துக்கு பந்து விறுவிறுப்பு, மழையாய் பொழியும் சிக்சர் பவுண்டரிகள் என டி20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போதையாய் மாறியுள்ளன. தொடக்கத்தில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளில் இதே மாதிரியான தொடர் விளையாடப்படுகிறது. வங்கதேசத்தில் பிபிஎல், இலங்கையில் எல்.பி.எல்., பாகிஸ்தானில் பி.எஸ்.எல்., ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், தற்போது தென்னாப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 ஆகியவை இதற்கான உதாரணங்கள்.
டி20 போட்டிகள் அதிகபட்சமாக 4 மணிநேரத்திற்குள் முடிந்து விடும் என்பதால் இதற்கான வரவேற்பு அதிகம் காணப்படுகிறது. இன்னும் விறுவிறுப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் 10 ஓவர் போட்டிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3ஆவது மற்றும் கடைசி போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த மைதானத்தில் 38 ஆயிரம்பேர் அமர்ந்து கிரிக்கெட்டை ரசிக்கலாம். ஆனால் நேற்று அதிகபட்சமாக 17 ஆயிரம் பேர் மட்டுமே போட்டியைப் பார்த்தனர். ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ‘3ஆவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில், விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளனர். இன்னொரு பக்கம் மைதானம் ரசிகர்கள் கூட்டமின்றி காலியாக கிடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிவை நோக்கி செல்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yuvaraj Singh