வாழ்த்துகள் நட்டு... நீங்க ஒரு லெஜண்ட்... நடராஜனை தமிழில் வாழ்த்திய டேவிட் வார்னர்

வாழ்த்துகள் நட்டு... நீங்க ஒரு லெஜண்ட்... நடராஜனை தமிழில் வாழ்த்திய டேவிட் வார்னர்

வார்ன்ர் - நடராஜன்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  இந்திய வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் தமிழில் வாழ்த்தி உள்ளார்.

  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நெட் பவுலராக சென்று 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன். டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக போட்டியிலேயே விக்கெட்களை வீழ்த்தி தனது துல்லியமான யார்க்கரால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை சொந்த மண்ணிலேயே நடுங்க வைத்தார்.

  நடராஜன் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐ.பி.எல் 2021 தொடர் தான். இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் விளையாடிய நடராஜன் கடைசி ஓவர்களில் தரமாக பந்துவீசி முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரை திக்குமுக்கு ஆடவைத்தார்.

  ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்தது முதலே நடராஜனை டேவிட் வார்னர் தொடர்ந்து வாழத்தி வருகிறார். ஆஸ்திரேலிய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்து சொந்த மண்ணில் தோல்வியடைந்த விரக்தியில் உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை அந்நாட்டு ஊடகங்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலர் விமர்சித்து வருகின்றனர்.

  இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் தமிழல் வாழ்த்து தெரிவித்துள்ளது தான் மிக சிறப்பு. அவரது தமிழ் கேட்பதற்கு வேறுமாதிரி இருந்தாலும் அவரது ஸ்போர்ட்மேன்ஷிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.  அந்த வீடியோவில் வாழத்துகள் நட்டு.. வாழ்த்துகள்.. என்று தமிழில் பேசிய டேவிட் வார்னர் நீங்கள் ஒரு லெஜண்ட் என்று வெகுவாக பாராட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.
  Published by:Vijay R
  First published: