பேட்டிங் அட்வைஸ்.. கழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான்.. கோச் கொடுத்த அதிர்ச்சி தகவல்...

யூனிஸ் கான் எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் தெரவித்துள்ளார்.

பேட்டிங் அட்வைஸ்.. கழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான்.. கோச் கொடுத்த அதிர்ச்சி தகவல்...
யூனிஸ் கான்
  • Share this:
பாகிஸ்தான் அணிக்கு 2014-19 வரை பேட்டிங் பயிற்சியளராக இருந்தவர் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிளவர். பாகிஸ்தானில் இருந்த வரை மிகுந்த பயத்துடனே இருந்தேன் என்று கூறி பல அதிர்ச்சி சம்பவங்களை வெளியிட்டவர் கிரான்ட் பளவர். இவர் தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் யூனிஸ் கான் மீது கிரான்ட் ப்ளவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதில், “2016-ம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்றோம். அந்த போட்டியில் யூனிஸ் கான் முதல் பந்திலேயே அவுட்டாகினார்.

உணவு இடைவேளையின் போது அவருக்கு பேட்டிங் அட்வைஸ் வழங்க முயன்றேன். ஆனால் எனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளாத அவர் எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். அப்போது அருகில் இருந்த தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அவரை சமாதனப்படுத்தினார்.


இந்த சம்பவம் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. யூனிஸ் கான் டெஸட் போட்டியில் சிறந்த வீரர். அவரது கேரியருக்கு முன்னால் என்னால் நிற்க முடியாது. ஆனால் நான் கொடுத்த அட்வைஸை அவர் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்“ என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூனிஸ்கான் தற்போது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யூனிஸ் கான் 10099 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading