ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், இளம்வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை இந்திய அணியின் சுப்மன் கில் இன்று ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக அதிவிரைவில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சுப்மன் கில் ஏற்படுத்தி இருந்தார். வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி இருந்தார். அவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களத்தில் இறக்க வேண்டும் என்றும் ஷுப்டன் கில்லை விட அவர் பெட்டரான பேட்ஸ்மேன் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தனது பொறுப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தால், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சுப்மன் கில். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் விராட் கோலி, இஷன் கிஷன், ஹர்திக் பாண்ட்யா சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் இன்று ஏமாற்றம் அளித்தனர். ஆனால் தொடக்க வீரராக களத்தில் இறங்கிய சுப்மன் கில் மிக அற்புதமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார்.
149 பந்துகளை எதிர்கொண்ட அவர் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 9 சிக்சர்களும் 19 பவுண்டரிகளும் அடங்கும். இன்றைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் சுப்மன் கில் சில முக்கிய சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார். அவற்றில் மிக இளம்வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சர்வதேச சாதனை அடங்கும். முன்னதாக இதே சாதனையை வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இஷான் கிஷன் ஏற்படுத்தியிருந்தார். இதனை 23 வயதாகும் சுப்மன் கில் முறியடித்துள்ளார். இஷான் கிஷன் 24 வயதில் இநத் சாதனையை ஏற்படுத்தினார். இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளனர். இந்த சாதனையை சுப்மன் கில் 19 இன்னிங்ஸ்களிலேயே கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket