அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ரெஹான் அகமது இன்று ஏற்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 7 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இதன்பின்னர் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்… வெற்றியை நெருங்கிய இங்கிலாந்து அணி…
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்களையும், இங்கிலாந்து அணி 354 ரன்களையும் எடுத்திருந்தது. இதையடுத்து நடந்த இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் இளம் பந்து வீச்சாளர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையையும், ரெஹான் இன்று ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த சாதனை படைத்தபோது அவருக்கு 18 வயது 193 நாட்கள் ஆகியிருந்தன.
ஆனால் ரெஹான் இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தபோது அவருக்கு 18 வயது மற்றும் 126 நாட்கள் மட்டுமே பூர்த்தி அடைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை முறியடித்து புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார் ரேஹான்.
பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 55 ரன்களே தேவைப்படுகிறது. நாளை 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளதால் இந்த போட்டியில் மிக எளிதாக இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket