ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மைதானத்திற்குள் புகுந்து ரோஹித் சர்மாவை கட்டிப் பிடித்த சிறுவன்… போட்டியின்போது பரபரப்பு

மைதானத்திற்குள் புகுந்து ரோஹித் சர்மாவை கட்டிப் பிடித்த சிறுவன்… போட்டியின்போது பரபரப்பு

மைதானத்திற்கு புகுந்து  ரோஹித் சர்மாவை கட்டிப் பிடிக்கும் சிறுவன்...

மைதானத்திற்கு புகுந்து ரோஹித் சர்மாவை கட்டிப் பிடிக்கும் சிறுவன்...

சுப்மன் கில் நிதானமாக விளையாட, கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்டினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் அனுமதியின்று புகுந்த இளம் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் மிரட்டிய சூழலில், இன்று டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் 5 பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் ரன் ஏதும் எடுக்காமலும் , டெவோன் கான்வே 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் 2 ரன்களும், டேரில் மிட்ச்செல் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். விக்கெட் இழப்பை தடுப்பார் என்று எதிர்பாக்கப்பட்ட கேப்டன் டாம் லாதம் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதன்பின்னர் இணைந்த கிளென் பிலிப்ஸ் – பிரேஸ்வெல் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து ரன்களை எடுத்தது. பிலிப்ஸ் 52 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். கடந்த போட்டியில் 140 ரன்கள் எடுத்து மிரட்டிய பிரேஸ்வெல் 22 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சான்ட்னர் 27 ரன்கள் எடுக்க, இவர்களின் பங்களிப்புடன் அணி 100 ரன்களை கடந்தது.

34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர்ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். சிராஜ், தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – சுப்மன் கில் களத்தில் இறங்கினர்.

சுப்மன் கில் நிதானமாக விளையாட, கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்டினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ஷிப்லே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். முன்னதாக ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இளம் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் சர்மாவை கட்டிப் பிடித்தார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த பாதுகாவலர்கள் முயன்றனர். அப்போது அவர்களிடம் ‘அவன் சிறுவன் அவனை போக விடுங்கள்’ என்று கனிவுடன் கூறினார். இதையடுத்து இளம் ரசிகர் மைதானத்தை விட்டு வெளியேறினார். ரசிகரிடம் ரோஹித் சர்மா கனிவுடன் நடந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

First published:

Tags: Cricket