போட்டி தொடங்குவதற்கு முன்பாக உடல் நலம் பாதிப்பு அடைந்த இளம் கிரிக்கெட் வீரர் சித்தார்த் சர்மா உயிரிழந்துள்ளார். இந்தியாவில் முதல் தர போட்டிகளில் இமாச்சல பிரதேச அணிக்காக விளையாடி வந்த அவர் உயிரிழந்திருப்பது இந்திய கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குஜராத் மாநிலம் வடோதராவில் பரோடா அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இமாச்சல பிரதேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் சர்மாவும் இடம்பெற்றிருந்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு வாந்தி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வடோதராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சில நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சித்தார்த்திற்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரர் ஆகியோர் கனடாவில் இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையை இமாச்சல பிரதேச அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் இமாச்ச பிரதேச அணியில் சித்தார்த் சர்மா இடம்பெற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.
6 முதல்தர போட்டிகளிலும், 6 ஏ பிரிவு போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் இமாச்சல பிரதேச அணிக்காக சித்தார்த் சர்மா விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
உலகக்கோப்பை ஹாக்கி 2023 : ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றி
சித்தார்த் சர்மாவின் உயிரிழப்புக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘விஜய் ஹசாரே கோப்பையை வென்ற இமாச்சல பிரதேச அணியில் இடம்பெற்றிருந்த சித்தார்த் சர்மா உயிரிழந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் தருவானாக’ என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket