முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘சுழற்பந்தை எதிர்கொள்வதை ரோஹித்திடமிருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்’ – முன்னாள் வீரர் வலியுறுத்தல்

‘சுழற்பந்தை எதிர்கொள்வதை ரோஹித்திடமிருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்’ – முன்னாள் வீரர் வலியுறுத்தல்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

கே.எல்.ராகுல், கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஸ்பின்னை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுழற்பந்து  வீச்சை எதிர்கொள்வதை ரோஹித் சர்மாவிடமிருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். நீண்ட நாட்களுக்கு பின்னர் அவர் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேநேரம், கே.எல்.ராகுல், கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஸ்பின்னை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். ரோஹித் சர்மாவின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் உலகில் கவனம் பெற்று வருகிறது.

ரோஹித் குறித்து முகமது கைஃப் கூறியதாவது- ஸ்பின் பவுலிங்கை ரோஹித் சர்மா அற்புதமாக எதிர்கொள்கிறார். அனுபவம் மிக்க ஆட்டக்காரர் எப்படி விளையாட வேண்டுமோ, அதை சுழற்பந்து வீச்சில் அற்புதமாக செய்கிறார் ரோஹித் சர்மா. லாங் ஆனில் ஃபீல்டர் நின்றாலும், அவருக்கு மேலே பந்தை தூக்கி அடித்து சிக்சராக மாற்றுகிறார். இளம் வீரர்கள் ரோஹித் எப்படி சுழற்பந்தை எதிர்கொள்கிறார் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். இப்போது அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை ரோஹித் சர்மா குவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket, Rohit sharma