Home /News /sports /

டெஸ்ட் லெவனில் உனக்கு இடம் உண்டு - அஸ்வின் ஊக்குவித்த தமிழக இளம் வீரர்

டெஸ்ட் லெவனில் உனக்கு இடம் உண்டு - அஸ்வின் ஊக்குவித்த தமிழக இளம் வீரர்

அஸ்வின்

அஸ்வின்

தமிழக கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து வருகிறார் ரஞ்சி டிராபி 2021-22 சீசனில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து டெல்லி (149 பந்தில் 117) மற்றும் சத்தீஸ்கர் (127 ரன்கள் 141 பந்துகளில்). அணிகளுகு எதிராக அடுத்தடுத்து சதங்களை எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் 2022 தொடரில் அறிமுகமானார்.

மேலும் படிக்கவும் ...

    ஆனால் ஐபிஎல் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 21 ரன்களையே எடுத்து சொதப்பி விட்டார். ஆனால் இதனால் அவர் உற்சாகம் குறையவில்லை, ஐபிஎல் தொடரில் சில முக்கியமான வீரர்களுடன் ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டது ஒரு மகத்தான அனுபவம் என்கிறார் பாபா இந்திரஜித்.

    ரஞ்சி டிராபியில் தொடர்ந்து பாபா இந்திரஜித் அசத்தி வருவதால் அஸ்வின் அவருக்கு ஊக்குமூட்டும் விதமாக டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதுண்டு, அதில் இந்திரஜித் ஒருநாள் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்று அவருக்கு நம்பிக்கையும் தைரியமும் அளித்துள்ளார் அஸ்வின்.

    ஸ்போர்ட்ஸ்கீடாவுக்காக பாபா இந்திரஜித் கூறும்போது, “எனக்கு அஸ்வினை நீண்டகாலமாகத் தெரியும். இருவரும் லீக் கிரிக்கெட்டில் சேர்ந்து ஆடியிருக்கிறோம். ரஞ்சி டிராபியிலும் சேர்ந்து ஆடியிருக்கிறோம். எனவே நான் எப்போது நன்றாக ஆடினாலும் அஸ்வின் எனக்கு மெசேஜ் செய்கையில், ‘டெஸ்ட் லெவனில் உனக்கு ஓர் இடமுண்டு, சிலருக்கு அணிக்குள் வர காலம் பிடிக்கும், கடினமாக உழை உன் நேரம் நிச்சயம் வரும்’ என்று ஊக்கமளிப்பார். இத்தகைய பாராட்டுதல்கள் எனக்கு பெரிய அர்த்தம் கொடுப்பவை.

    அஸ்வின் போன்ற ஒரு லெஜண்டிடமிருந்து பாராட்டுதலைப் பெறுவது சாதாரணமல்ல. சில வேளைகளில் அவர் வாழ்த்துவது எனக்குள், ‘ஓகே அவர் என்னிடம் ஏதோ ஒன்றைப் பார்க்கிறார்’என்ற எண்ணத்தை வரவழைக்கும். அது எனக்கு நம்பிக்கையூட்டும், அவர் இதை நீண்ட காலமாக எனக்குச் செய்து வருகிறார்” என்றார் பாபா இந்திரஜித்.

    பாபா இந்திரஜித் இதுவரை 56 முதல்தர போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 19 அரைசதங்கள் உட்பட 53.35 சராசரியில் 3788 ரன்கள் எடுத்துள்ளார். 41 லிஸ்ட் ஏ கேம்களில், அவர் ஒரு சதம் மற்றும் 8 அரைசதங்கள் உட்பட 44.38 சராசரியில் 1154 ரன்கள் எடுத்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: R Ashwin

    அடுத்த செய்தி