Home /News /sports /

எங்க ஆள் ஒருத்தர் மேல நீங்க கைய வச்சா நாங்க 11 பேரும் வருவோம்: ‘செயின் ஜெயபால்’ போல் கே.எல்.ராகுல் பஞ்ச் டயலாக்

எங்க ஆள் ஒருத்தர் மேல நீங்க கைய வச்சா நாங்க 11 பேரும் வருவோம்: ‘செயின் ஜெயபால்’ போல் கே.எல்.ராகுல் பஞ்ச் டயலாக்

கே.எல்.ராகுல் பஞ்ச் டயலாக்

கே.எல்.ராகுல் பஞ்ச் டயலாக்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வாக்குவாதங்கள் முற்றியது, ஸ்லெட்ஜிங், வாய்வார்த்தைகள் முறைப்புகள், சிரிப்புகள், கத்தல்கள், கதறல்கள், உரசல்கள் அனைத்தும் சூடுபிடித்தன. இது இங்கிலாந்துக்கு பின்னடைவை கொடுக்க இந்திய அணி எழுச்சி கண்டு அபார வெற்றி பெற்றது.

மேலும் படிக்கவும் ...
  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வாக்குவாதங்கள் முற்றியது, ஸ்லெட்ஜிங், வாய்வார்த்தைகள் முறைப்புகள், சிரிப்புகள், கத்தல்கள், கதறல்கள், உரசல்கள் அனைத்தும் சூடுபிடித்தன. இது இங்கிலாந்துக்கு பின்னடைவை கொடுக்க இந்திய அணி எழுச்சி கண்டு அபார வெற்றி பெற்றது.

  ஜேம்ஸ் ஆண்டர்சனை சீண்டுமாறு ஜஸ்பிரித் பும்ரா பயங்கரமான பவுன்சர்களைப்போட்டு அவரைக் காயப்படுத்த எத்தனித்து ஹெல்மெட், உடம்பிலெல்லாம் அடி கொடுத்தனர், இது கிரிக்கெட்டில் மிகவும் பழைய உத்தி, இது பெரிதாக எடுத்துக் கொள்ள படமாட்டாது, எங்காவது ஒரு ஈனமான முனகல் டெய்ல் எண்டர்களை இப்படி செய்யலாமா என்று கேட்கும்.

  இந்திய ஸ்பின்னர்கள் பிஷன் பேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திரசேகர், திலிப் தோஷி போன்றோர் இத்தகைய பவுன்சர்கள் தாக்குதலை எதிர்கொண்டவர்கள்தான்.

  ஆனால் ஆண்டர்சன் இதை கிரிக்கெட்டின் ஒரு அங்கமாகக் கருதாமல் தனிப்பட்ட பகையாக மாற்றினார். தான் மட்டும் பவுன்சர் போடாமல் அனைத்து பவுலர்களையும் இதில் ஈடுபடுத்தி பும்ராவை காயப்படுத்தும் முனைப்பு காட்டினார், காயமடைந்த மார்க் உட், முதலில் களமிறங்காமல், பும்ரா இறங்கியவுடன் வந்து பந்து வீசி பவுன்சர்காள் மழை பொழிந்து உடம்பில் ஹெல்மெட்டில் கொடுத்து பழிதீர்த்தார், ஆனால் கடைசியில் பும்ராதான் வெற்றி கண்டார்,

  இதோடு மட்டுமல்லாமல் ஜோஸ் பட்லர் பும்ராவை கிண்டலடித்து வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்தன. இதெல்லாம் மிகவும் மோசமான விஷயங்கள், ஆனால் வர்த்தகமயமாகிப் போன கிரிக்கெட்டில் இதெல்லாம் ஆக்ரோஷம் என்று மறுபெயரிடப்பட்டன. வணிகமயம், வர்த்தகமயத்தோடு சேர்ந்து குற்றங்களும் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

  இதுதான் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணம், ஆனால் இந்தியா வெற்றி பெற இப்படிப்பட்ட முடுக்கு விசை தருணங்கள் தேவைப்படுகிறது, இதெல்லாம் செய்யாத நியூசிலாந்திடம் கோலி படையின் பாச்சா பலிக்கவில்லை.

  இந்நிலையில் இந்தியாவிஹ் ஆக்ரோஷம் பற்றி லார்ட்ஸ் டெஸ்ட் சத, ஆட்ட நாயகன் கே.எல்.ராகுல் கூறியதாவது:

  இரண்டு சவாலான அணிகள் ஆடும்போது இவற்றையெல்லாம் எதிர்பார்க்க வேண்டும். பெரிய திறமைகள், சில பல வார்த்தைகள் சகஜம்தான். சிலபல கிண்டல்களை கண்டுகொள்ள மாட்டோம்.

  ஆனால் எங்களில் ஒரு ஆள் மேல் நீங்கள் பாய்ந்தால் நாங்கள் 11 பேரும் அவர் பின்னால் நிற்போம்.

  என்னுடைய சதம் லார்ட்ஸ் பெயர்ப்பலகையில் இடம்பெறுமா என்று தினமும் பார்க்கிறேன் ஆனால் என் பெயர் கொண்ட தற்காலிக காகிதமே அங்கு இன்னும் உள்ளது. 360 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்தது முக்கியமானது. ட்ரெண்ட் பிரிட்ஜிலும் நம் பேட்ஸ்மென்கள் பெரிய கட்டுக்கோப்புடன் ஆடினர்.

  இவ்வாறு கூறினார் கே.எல்.ராகுல்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India Vs England, Kl rahul, Test match

  அடுத்த செய்தி