Home /News /sports /

ஐபிஎல் ஆடும்போது ஓய்வு இல்லையாம், இந்தியாவுக்கு ஆடும்போது ஓய்வாம்: மூத்த வீரர்கள் பற்றி கவாஸ்கர் காட்டம்

ஐபிஎல் ஆடும்போது ஓய்வு இல்லையாம், இந்தியாவுக்கு ஆடும்போது ஓய்வாம்: மூத்த வீரர்கள் பற்றி கவாஸ்கர் காட்டம்

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

ஐபிஎல் என்ற தொடரில் எல்லா சீனியர் வீரர்களும் ஆடுகின்றனர், அதன் பிறகு சர்வதேச தொடரின் போது ஓய்வு கேட்பது வழக்கமாகி வருகிறது, இதற்கு அனுமதிக்கக் கூடாது, அவர்களுகு ஓய்வு வேண்டுமென்றா ஐபிஎல் தொடரின் போது எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று சுனில் கவாஸ்கர் காட்டமாக சீனியர் வீரர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் என்ற தொடரில் எல்லா சீனியர் வீரர்களும் ஆடுகின்றனர், அதன் பிறகு சர்வதேச தொடரின் போது ஓய்வு கேட்பது வழக்கமாகி வருகிறது, இதற்கு அனுமதிக்கக் கூடாது, அவர்களுகு ஓய்வு வேண்டுமென்றா ஐபிஎல் தொடரின் போது எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று சுனில் கவாஸ்கர் காட்டமாக சீனியர் வீரர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லை. பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஒரு அணியை பி டீமை, இங்கிலாந்தோ ஆஸ்திரேலியாவோ ஏன் வெஸ்ட் இண்டீஸோ தன் பி, சி அணிகளை அனுப்பி வைத்தால் பிசிசிஐ ஒப்புக் கொள்ளுமா என்பதே கேள்வி.

    விராட் கோலி பார்மில் இல்லை, பார்மில் இல்லாத வீரருக்கு ஓய்வு ஒரு கேடா என்று பல மூத்த வீரர்களும் சாடி வருகின்றனர். இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    வீரர்களுக்கு ஓய்வு என்ற கொள்கையை நான் ஏற்கவில்லை. ஆம், ஏற்க மாட்டவே மாட்டேன், ஏனெனில் ஐபிஎல் ஆடுகிறார்கள், அப்போது ஓய்வு கேட்பதில்லை, விடுப்பு கேட்பதில்லை. ஆனால் இந்தியாவுக்கு ஆடும்போது மட்டும் ஓய்வா? நான் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

    இந்தியாவுக்கு ஆடித்தான் ஆக வேண்டும், ரெஸ்ட் பற்றி பேசாதீர்கள். 20 ஓவர் கிரிக்கெட் உங்கள் உடலுக்கு எந்த வித தீமையையும் விளைவித்து விடாது. டெஸ்ட் போட்டிகள் என்றால் மனம், உடல் இரண்டும் களைப்படையும். இது எனக்குப் புரிகிறது, ஆனால் டி20 கிரிக்கெட்டில் அப்படியல்ல.

    நான் நேர்மையாகவே கூறுகிறேன், பிசிசிஐ இந்த ஓய்வு என்ற கொள்கையைக் கொஞ்சம் சீரியஸாகப் பார்க்க வேண்டியுள்ளது. கிரேட் ஏ கிரிக்கெட் வீரர்கள் நல்ல ஒப்பந்தத் தொகை பெருகின்றனர். ஒவ்வொரு மேட்சுக்கும் நல்ல பைசா வருகின்றது. எந்த நிறுவனத்திலாவது ஒரு சி.இ.ஓவுக்கோ, நிர்வாக இயக்குனருக்கோ இந்த மாதிரி ஓய்வு கிடைக்கிறதா?

    இந்திய கிரிக்கெட் இன்னும் தொழில்பூர்வமாக மாற கோடு ஒன்றை கிழிக்க வேண்டும். ரெஸ்ட் வேண்டுமா, உங்கள் தொகையும் குறையும் ஒப்பந்தத் தொகையும் குறையும் பரவாயில்லையா? என்று கேட்க வேண்டும். சரியென்றால் ஓய்வு கொடுக்கட்டும். ஏனெனில் நீங்கள் ஆட விரும்பவில்லை என்று எடுத்துக் கொள்கிறேன்.

    ஆனால் எந்த ஒரு வீரரும் இந்திய அணிக்கு ஆடமாட்டேன், ஓய்வு வேண்டும், என்று எப்படி கேட்க முடிகிறது? இவர்கள் எப்படி அனுமதிக்கின்றனர்? எனக்கு இந்த கொள்கை மீது நம்பிக்கை இல்லை.” என்று கவாஸ்கர் காட்டமாக கேட்கிறார்.

    இது ஏதோ ஒரு சில விளிம்பு நிலை வீரர்களை வைத்துக் கொண்டு, அனைவருக்கும் வாய்ப்பு தருகிறோம் என்ற பெயரில் மூத்த வீரர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப இந்திய அணிக்கு ஆடுவதில்லை என்பதை மூடி மறைத்து வருகின்றனர் என்று ஒரு சில தரப்புகள் வைக்கும் விமர்சனங்களும் கவனிக்கத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India captain Rohit Sharma, Virat Kohli

    அடுத்த செய்தி