Suresh Raina | ஐசிசி கோப்பையா? முதலில் ஐபிஎல் கோப்பையை வெல்லட்டும்: விராட் கோலி கேப்டன்சியை விமர்சித்த ரெய்னா

சுரேஷ் ரெய்னா

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி மூன்று பிரிவுகளிலும் நீடிப்பது சரியானதுதானா என்பது குறித்துப் பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. அவர்தான் நம்பர் 1 என்றெல்லாம் பில்ட் அப் கொடுக்கப்படுகின்றன. ஆனல் அவர் ஐபிஎல் கோப்பையையே வென்றதில்லை என்கிறார் சுரேஷ் ரெய்னா.

  • Share this:
    ஐசிசி சார்பில் நடத்தப்படும் ஒரு கோப்பையைக் கூட கோலி தலைமையில் இந்திய அணி வென்றதில்லை. 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பின்ஸ் டிராபி, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அனைத்திலும் இறுதிவரை சென்றும் கோலியால் கோப்பையை வென்றுதர முடியவில்லை.

    அதேசமயம், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் கேப்டனாக நீண்டகாலமாகத் தொடரும் கோலியால் அந்த அணிக்கு இதுவரை ஒரு கோப்பையைக்கூட பெற்றுத் தரமுடியவில்லை. இதனால் சிறந்த வீரராக கோலியைக் கருதலாம், ஆனால், வெற்றிகரமான வீரராகக் கருத முடியாது என்கிறார் சுரேஷ் ரெய்னா.

    Also Read: விராட் கோலி நம்பர் 1 டெஸ்ட் கேப்டனா?- சாதகமான  ஆட்டக்களங்கள், பலவீனமான அணிகளுடனேயே அதிக வெற்றிகள்

    இந்நிலையில் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ''விராட் கோலி நம்பர் ஒன் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை என்று நினைக்கிறேன். விராட் கோலி நிகழ்த்திய சாதனையின் மூலம் இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். உலக கிரிக்கெட்டிலும் விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அதற்கான பல சாதனைகளை விராட் கோலி செய்துள்ளார்.

    ஆனால், ஐசிசி கோப்பை பற்றி நீங்கள் கேட்டால், விராட் கோலி தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணி வென்றதில்லை. ஐபிஎல் தொடரில்கூட கோலியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

    என்னைப் பொறுத்தவரை கோலிக்கு இன்னும்கூட சிறிதுகால அவகாசம் கொடுக்கலாம். டி20 உலகக் கோப்பை வருகிறது. அதன்பின் ஒருநாள் உலகக் கோப்பை வருகிறது. இவை இரண்டிலும் கோலிக்கு வாய்ப்பளிக்கலாம். இந்த இரு போட்டிகளிலும் இறுதிப் போட்டியை அடைவது என்பது சாதாரணமானது அல்ல. சில தவறுகள் செய்தாலும் வாய்ப்பை இழந்துவிடுவோம்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தமைக்கு காலநிலை ஒரு காரணமல்ல, பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே காரணமாகும். 2 நாட்கள் முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டாலும், கடைசியில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய அணி 4 செஷன்களிலும் பேட் செய்திருக்க வேண்டும். 2-வது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 139 ரன்களை நியூஸிலாந்து எளிதாக சேஸிங் செய்து கோப்பையை வென்றுவிட்டது. அணியில் உள்ள மூத்த வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேட் செய்ய வேண்டும்.

    நாம் சோக்கர்ஸ் அல்ல. 1983 உலகக்கோப்பையை வென்றுள்ளோம், 2011 உலகக்கோப்பை 2007 டி20 உலகக்கோப்பை வென்றுள்ளோம், ஆகவே நம்மை சோக்கர்ஸ் என்று அழைக்க முடியாது. ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்தான் விராட் கோலி. அடுத்த 12-16 மாத காலத்தில் இந்தியாவுக்கு ஒரு ஐசிசி கோப்பை கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

    இவ்வாறு கூறினார் சுரேஷ் ரெய்னா.
    Published by:Muthukumar
    First published: