• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 85 மைல் ஸ்பீடு போடுறீங்க ஆனால் அவருக்கு அது 3 மைல் ஸ்பீடுதான்

85 மைல் ஸ்பீடு போடுறீங்க ஆனால் அவருக்கு அது 3 மைல் ஸ்பீடுதான்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

கிரிக்கெட்டில் சில வீரர்கள் ஆடும்போது பேட்டிங் இவ்வளவு எளிதா என்பது போல் இருக்கும், அதில் முதன்மையானவர் நியூசிலாந்து மேதை மார்ட்டின் குரோவ், நடப்பு கிரிக்கெட்டில் ரோகித் சர்மா. பேட்டிங் லுக் ஈசி என்பார்களே அந்த வகையான ஒரு ஆட்டம்.

  • Share this:
    கிரிக்கெட்டில் சில வீரர்கள் ஆடும்போது பேட்டிங் இவ்வளவு எளிதா என்பது போல் இருக்கும், அதில் முதன்மையானவர் நியூசிலாந்து மேதை மார்ட்டின் குரோவ், நடப்பு கிரிக்கெட்டில் ரோகித் சர்மா. பேட்டிங் லுக் ஈசி என்பார்களே அந்த வகையான ஒரு ஆட்டம்.

    ஓவல் டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்ததன் மூலம் அயல் மண்ணில் முதல் சதம் எடுத்து சாதனை புரிந்தார் ரோகித் சர்மா. இந்தத் தொடர் முழுதுமே ஏதோ கவாஸ்கர் போல் அவர் தடுப்பாட்டம் அமைகிறது, அவ்வப்போது தன் ஹிட் மேன் முகத்தையும் காட்டுகிறார், எச்சரிக்கையும் அதிரடியும் கலந்த ஒரு கலப்பில் அவர் ஓவல் டெஸ்ட் போட்டியில் 127 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார், இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மைக்கேல் வான், இதனையடுத்து ரோகித் சர்மாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று விட்டார்.

    பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலில் மைக்கேல் வான் கூறியது: “ரோகித் சர்மாவுக்கு பந்து வீசும் போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வேகமாக ஓடி வந்து முயற்சி எடுத்து வீசுகிறார்கள். மணிக்கு 85 மைல் வேகத்தில் வீசுகிறீர்கள். ரோகித் சர்மா முன்னால் வந்து அதனை ஏதோ 3 மைல் வேகப்பந்து போல் தடுத்தாடுகிறார். இதோடு இல்லாமல் அடித்தும் ஆடுகிறார். ஆன் சைடில் பந்தை விரட்டுகிறார், அதாவது பார்க்க எப்படியிருக்கிறது என்றால்- இதெல்லாம் ரப்பிஷ் என்பது போல் அவர் பந்து வீச்ச்சை ட்ரீட் செய்வது போல் இருக்கிறது. ஸ்டைலிஷ் ஆக ஆடும் வீரர்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கும். பிரஷர் சூழ்நிலையில் ஒன்றுமே இல்லையே என்பது போல் ஆடும் வீரர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ரோகித் சர்மா அத்தகைய பிளேயர்.” என்றார் மைக்கேல் வான்.

    இங்கிலாந்து பந்து வீச்சில் வெரைட்டி இல்லை என்கிறார் மைக்கேல் வான். மொயின் அலியின் ஸ்பின் பவுலிங் உண்மையில் எந்த ஒரு எஃபெக்டும் இல்லை. 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 82-83 மைல்கள் வேகம் வீசுகின்றனர். ஆனால் இது ஸ்விங் ஆனால்தான் எடுபடும், என்கிறார் மைக்கேல் வான். இந்திய அணி 4ம் நாள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் சதக்கூட்டணி அமைத்தனர். கடைசி 4 விக்கெட்டுகளுக்காக 154 ரன்களை இந்திய அணி சேர்த்தது.

    இதனையடுத்து ஸ்கோர் 466 ரன்களை எட்ட 368 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து வெற்றியை நோக்கி 77/0 என்று 4ம் நாளை முடித்தது. 5ம் நாளான இன்று இந்தியா வெற்றி பெற 10 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும், இங்கிலாந்துக்கு வெற்றிக்குத் தேவை 291 ரன்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: