நீ என்னை மிகவும் எரிச்சலடைய செய்கிறாய்...! சாஹலை கடுமையாக தாக்கிய கெய்ல்

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அவரது டிக்-டாக் வீடியோக்களை இதற்கு முன்னர் விமர்சித்துள்ளனர்.

நீ என்னை மிகவும் எரிச்சலடைய செய்கிறாய்...! சாஹலை கடுமையாக தாக்கிய கெய்ல்
கெய்ல் - சாஹல்
  • Share this:
சுழற்பந்து வீச்சாளர் சாஹலை மேற்கிந்திய வீரர் கெய்ல் இணையத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவர் பதிவிடும் வேடிக்கையான மற்றும் நகைச்சுவையான வீடியோக்கள் சக அணி வீரர்கள் மற்றுமில்லாது பிற கிரிக்கெட் வீரர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அவரது டிக்-டாக் வீடியோக்களை இதற்கு முன்னர் விமர்சித்துள்ளனர். நாசர் உசேன் உடனான இன்ஸ்டாகிராம் நேரலையின் போது விராட் கோலி, சஹாலின் டிக்-டாக் வீடியோவிலிருந்து அவர் ஒரு கோமாளி என்று தெரிந்து கொள்ளலாம் என்று கேலி செய்திருந்தார்.


தற்போது மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் சஹாலின் டிக்-டாக் வீடியோவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “டிக்-டாக்கில் உங்களை பிளாக் செய்ய சொல்லப் போகிறேன். நீங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் எரிச்சலுட்டும் நபர். உடனடியாக சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுங்கள். நாங்கள் சாஹலால் சோர்வடைகிறோம். நான் உன்னை மீண்டும் என் வாழ்நாளில் பார்க்க விரும்பவில்லை. நான் உன்னை பிளாக் செய்கிறேன்“ என்றுள்ளார்.

First published: April 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading