கிரோட்டாவை புகழ்ந்த ரோஹித் சர்மா!

கிரோட்டாவை புகழ்ந்த ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா
  • News18 Tamil
  • Last Updated: September 25, 2019, 4:56 PM IST
  • Share this:
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உலகத் தலைவர்கள் முன் கொதித்தெழுந்த கிரோட்டாவை கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா பாராட்டி உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். உலக வெப்பமாயவதை தடுப்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி கிரோட்டா தன்பெர்க் பேசியது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. . அவர், உலகத் தலைவர்களையும் ஐ.நா சபையின் மீதும் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


கிரேட்டா தங்பெர்க்


“உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவு, குழந்தை பருவத்தை நீங்கள் திருடிவிட்டீர்கள். நாங்கள் உங்களை பார்த்து கொண்டிருக்கிறோம். அதை சொல்வதற்கு தான் இங்கு வந்துள்ளேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை எதிர்பார்க்க உங்களுக்கு எவ்வளவு தைரியம், உங்களை மன்னிக்க மாட்டோம்“ என கிரோட்டா ஆவேசமாக பேசினார்.

கிரேட்டோவின் உரைக்கு உலகம் முழுதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா ட்விட்டரில் கிரோட்டாவை பாராட்டி உள்ளார். அதில், “பூமியை பாதுகாக்கும் பொறுப்பும் இளைய சமூதாயத்தில் விடுவது முற்றிலும் தவறானது. கிரோட்டா நீங்கள் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்தீர்கள். இந்த விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. மாற்றத்திற்கான நேரம் தற்போது வந்துவிட்டது“ என்று பதிவிட்டுள்ளார்.
First published: September 25, 2019, 4:56 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading