உன் உடல் எடை 25-30 கிலோ அதிகம்: ரிஷப் பந்த்தை கேலி செய்த மேத்யூ வேட்

உன் உடல் எடை 25-30 கிலோ அதிகம்: ரிஷப் பந்த்தை கேலி செய்த மேத்யூ வேட்

பந்த்-வேட் சுவாரஸ்யம். | மெல்போர்ன் டெஸ்ட்

“பெரிய திரையில் உன் உருவத்தைப் பார்க்கிறாயா? உன்னை பெரிய திரையில் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது” என்று வேட் மீண்டும் ரிஷப் பந்த்தைச் சீண்டினார்.

  • Share this:
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியின் பிடியில் இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பேச்சு மட்டும் ஒருபோதும் குறையாது என்பதற்கிணங்க 3ம் நாளான இன்று மேத்யூ வேட், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் தன் வாய்வீராப்பைக் காட்டியுள்ளார்.

16வது ஓவர் முடியும் தறுவாயில் மேத்யூ வேட், ரிஷப் பந்த்தின் உடல் எடையைக் குறித்து கேலி செய்தது மைக்கில் எடுத்தது. “நீ 25 கிலோ எடை அதிகம். 20 கிலோவா 25-ஆ அல்லது 30 கிலோவா?” என்று மேத்யூ வேட் கேலி செய்தார்.

ரிஷப் பந்த் பின்னால் நின்று கொண்டு ஆஸி. வீரர்களை கொஞ்சம் கேலி செய்வதோடு இந்திய பவுலர்களையும் ஊக்குவிப்பவர். கொஞ்சம் சப்தம் அதிகமாகவே அவர் ஊக்குவிப்பார், இதனால் எதிரணி வீரர்களுக்கு ரிஷப் பந்தை கண்டால் எட்டிக்காய்.

இந்த முறையும் 24வது ஓவரில் ரிஷப் பந்த் ஏதோ பின்னால் நின்று கூற வேட் கடுப்பானார்.

“பெரிய திரையில் உன் உருவத்தைப் பார்க்கிறாயா? உன்னை பெரிய திரையில் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது” என்று வேட் மீண்டும் பந்த்தை சீண்டினார்.

மேலும் தேநீர் இடைவேளைக்கு பெவிலியன் செல்லும் போது ஃபாக்ஸ் கிரிக்கெட்டுக்கு வேட் கூறும்போது, “ரிஷப் பந்த் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கிறார்.. அவர் அதிகம் பேசுவதில்லை. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறார், என் பேட்டிங்கைப் பார்த்தால் சிரிப்பாகவா இருக்கிறது” என்று மேத்யூ வேட் அங்கலாய்த்தார்.
Published by:Muthukumar
First published: