என்னா அடி..! பவுலரை பலமாக தாக்கிய விக்கெட் கீப்பர்... வைரல் வீடியோ...

என்னா அடி..! பவுலரை பலமாக தாக்கிய விக்கெட் கீப்பர்... வைரல் வீடியோ...
விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20
  • Share this:
டி20 போட்டியில் ரன்அவுட் முயற்சியின் போது விக்கெட் கீப்பர் வீசிய பந்து எதிர்பாராதவிதமாக தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜா  மீது பலமாக தாக்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 போட்டியில் யார்க்ஷயர் - டர்ஹாம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டர்ஹாம் அணி பேட்டிங்கின் போது தென்னாப்பிரிக்கா பவுலர் கேசவ் மஹாராஜா பந்துவீசினார். பேட்ஸ்மேன் பந்தை விக்கெட் கீப்பர் அருகே தட்டிவிட்டு ரன் ஓட முயற்சிப்பார்.

அந்த பந்தை எடுத்த ஓடி சென்ற வேகத்தில் விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசுவதற்கு பதிலாக பவுலர் மீது தெரியாமல் வீசிவிடுவார். இதை சற்றும் எதிர்பார்க்காத கேசவ் மஹாராஜாவின் தொடையில் பந்து பலமாக தாக்கும். பந்து பட்ட வேகத்தில் வலி தாங்க முடியாமல் பவுலர் அலறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பந்து தாக்கியதில் வீரர் அலறுவது ஒருபக்கம் இருந்தாலும் அந்த வீடியோவை பார்த்த உடன் சிரிப்பவர்களின் அலறலே அதிகமாக உள்ளது. விக்கெட் கீப்பர் கண்டிப்பாக ஸ்டெம்பிற்கு குறிவைக்கவில்லை என்று வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலரும் கிண்டலடித்து வருகின்றனர்.இந்த போட்டியில் யார்க்ஷயர் 14 ரன்கள் வித்தியாசத்தில் டர்ஹாம் அணியை வீழ்த்தும். டர்ஹாம் அணிக்கு 146 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டது. ஆனால் டர்ஹாம் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Also Watch

First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்