Home /News /sports /

Year Ender 2021: 2021-ல் கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்த டாப் பிளேயர்கள்

Year Ender 2021: 2021-ல் கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்த டாப் பிளேயர்கள்

2021-ல் ஓய்வு பெற்ற கிரிக்கெட் தலைகள்.

2021-ல் ஓய்வு பெற்ற கிரிக்கெட் தலைகள்.

2021ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு ஒருவிதத்தில் துக்க ஆண்டுதான், நமக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்து விட்டனர். ஏ.பி.டிவில்லியர்ஸ் முதல் தற்போது ஹர்பஜன் சிங் வரை ஓய்வு அறிவித்த வீரர்கள் விவரங்களைப் பார்ப்போம்:

மேலும் படிக்கவும் ...
  2021ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு ஒருவிதத்தில் துக்க ஆண்டுதான், நமக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்து விட்டனர். ஏ.பி.டிவில்லியர்ஸ் முதல் தற்போது ஹர்பஜன் சிங் வரை ஓய்வு அறிவித்த வீரர்கள் விவரங்களைப் பார்ப்போம்:

  ஏ.பி.டிவில்லியர்ஸ் ( தென் ஆப்பிரிக்கா):

  நிச்சயமாக 2021-ன் மிகப்பெரிய ரிட்டையர்மெண்ட் டிவில்லியர்ஸ்தான், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி-க்காக இவரது 360 டிகிரி ஆட்டத்தை பார்த்துப் பார்த்து ரசித்த கண்களுக்கு இனி அவர் இல்லை என்பது கண்களில் நீர்த்துளி பனிக்கும் தருணம்தான். இவர் ஏன் 360 டிகிரி வீரர் என்றால் அவர் ஒரு சிறந்த ஹாக்கி வீரர். அதனால்தான் அந்த ஸ்கூப் ஷாட்டை சர்வ அலட்சியமாக அவர் ஆடுகிறார். 2017-ல் சர்வதேச கிரிக்கெட்டை கனத்த இதயத்துடன் துறந்தார், 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து வீரர் அடித்த அந்த கடைசி பந்து சிக்சர் அவரை துவைத்து எடுத்திருக்கும். இப்போது ஜோதி இனி பிரகாசமாக எரியாது.

  டுவைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்):

  பிரமாதமான ஸ்லோ யார்க்கர்களை வீசி டி20 இறுதி ஓவர்களில் பெரிய பெரிய ஹிட்டர்களையெல்லாம் ஓட விட்டவர் டிவைன் பிராவோ, தோனியின் தலைமை செயல் வீரர். விக்கெட் தேவை என்றால் தோனி இவரைத்தான் கொண்டு வருவார். சிஎஸ்கே அணியின் இன்றியமையாத ஆல்ரவுண்டர். பேட்டிங்கில் எந்தப் பந்தையும் யார்க்கர் உட்பட பவுண்டரிக்கு அனுப்புவதில் அசாத்திய திறமை கொண்டவர். 2021-ல் டி20 உலகக்கோப்பையில் இன்னொரு கோப்பையை வெஸ்ட் இண்டீஸால் வெல்ல முடியவில்லை இவரும் ஓய்வு அறிவித்தார். 2006லிருந்து வெஸ்ட் இண்டீஸுக்காக 90 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 1245 ரன்களை எடுத்துள்ளார்.

  டேல் ஸ்டெய்ன்:

  இவர் ஓடி வந்து வீசும் அந்த ரிதம், அந்த ஆக்‌ஷன் அடடா! அற்புதமானது. காயங்கள் அவரது கரியரில் பெரிய அளவில் விளையாடியது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பரம வைரி டேல் ஸ்டெய்ன். 31 ஆகஸ்ட் 2021-ல் ஓய்வு பெற்றார், ‘ஏகப்பட்ட மலரும் நினைவுகள்’ என்றார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட். சராசரி 22.95, 125 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட், 47 டி20 சர்வதேச போட்டிகளில் 64 விக்கெட்டுகள்.

  ஹர்பஜன் சிங்:

  41 வயதாகும் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறார். ஹர்பஜன் தன் ஐபிஎல் தொடர் வாழ்க்கையின் இறுதிப் பகுதிகளிலேயே மெண்ட்டாராக பணியாற்றத் தொடங்கி விட்டார். வருண் சக்ரவர்த்தியை ஒரு அற்புதமான ஸ்பின்னராக்கியடில் ஹர்பஜனின் பங்கு அபரிமிதமானது. 13 ஐபிஎல் சீசன்களில் 163 மேட்ச்களில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சராசரி 26, ஒருமுறை 18 ரன்களுக்கு 5 விக்கெட் சாய்த்தது அவரது சிறந்த பந்து வீச்சு. ஹர்பஜன் இன்று அதிகாரபூர்வமாக ஓய்வு அறிவித்தார்.

  அஸ்கர் ஆப்கான் (ஆப்கானிஸ்தான்):

  ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021-ல் நமீபியா போட்டியுடன் ஓய்வு பெற்ற அஸ்கர் ஆப்கானுக்கு ஆப்கான் வீரர்கள் மரியாதை செலுத்திய போது அவர் தன் கண்ணீரை சிரமப்பட்டு அடக்கும் போது நமக்குமே பரிதாபமாகவே இருந்தது. கடைசி மேட்சில் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டி முடிந்த பிறகு நேர் காணல் அளித்த அஸ்கர் ஆப்கான் அப்போது கண்ணீரை அடக்க முடியாமல் அழுதே விட்டார்.

  உன்முக்த் சந்த்:

  இந்தியாவில் சேவாகுக்குப் பிறகு அடுத்த சேவாக் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற கேப்டன் உன்முக்த் சந்த் ஆகஸ்ட் 13ம் தேதி அதிர்ச்சிகரமாக ஓய்வு அறிவித்து விட்டு அமெரிக்கா சென்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்த உன் முக்த் சந்த், பிக்பாஷ் லீகில் ஆட ஆஸ்திரேலியா சென்று விட்டார். இவர் ஒரு அறிவுஜீவி என்பதும் கவனிக்கத்தக்கது.

  நமன் ஓஜா:

  தோனியின் இடத்தை இட்டு நிரப்பும் ஒரே வீரர் நமன் ஓஜா என்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மெனும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவுக்கு ஆடாமலேயே ஓய்வு பெற்று விட்டார், இலங்கைக்கு எதிராக 2010-ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், ஜிம்பாப்வேயுடன் ஒரேயொரு டி20 போட்டியில் ஆடினார். 2015-ல் இலங்கைக்கு எதிராக ஒரே டெஸ்ட். பிப்ரவரியில் கண்ணீருடன் ஓய்வு பெற்றார்.

  யூசுப் பதான்: 2007 உலகக்கோப்பை வெற்றியிலும் இந்திய அணியில் இருந்தார், 2011 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை அணியிலும் இருந்தார். பிப்ரவரி 27ம் தேதி இவரும் ஓய்வு அறிவித்தார், ஐபிஎல் கிரிக்கெட்டில் 37 பந்துகளில் சதம் எடுத்த பெருமை உடையவர். 3 ஐபிஎல் கோப்பை வென்ற வீரர் இவரே.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, Sports, YearEnder 2021

  அடுத்த செய்தி