ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Year Ender 2021: 2021-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் அணி - ஆகாஷ் சோப்ரா தேர்வில் கோலி, ஸ்மித் இல்லை

Year Ender 2021: 2021-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் அணி - ஆகாஷ் சோப்ரா தேர்வில் கோலி, ஸ்மித் இல்லை

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

இன்னொரு ஆச்சரியமான வீரர் பாகிஸ்தானின் இடது கை வீரர் ஃபவாத் ஆலம். ரிஷப் பண்ட் இருக்கிறார், ஆனால் பாபர் ஆசமுக்கு இடமில்லை. கைல் ஜேமிசன், அஸ்வின் சரி, எதற்காக அக்சர் படேலை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. ஆண்டர்சன், ஷாகின் அஃப்ரீடி இருக்கிறார், அருமையாக வீசும் டிம் சவுதீ இல்லை பாட் கமின்ஸ் இல்லை.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய முன்னாள் தொடக்க வீரரும் தற்போதைய கிரிக்கெட் எழுத்தாளர் மற்றும் பண்டிதருமான ஆகாஷ் சோப்ரா 2021-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த அணிக்கு கேப்டன் யார் தெரியுமா?- அது கேன் வில்லியம்சன் தான்.

  2021ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டாலும் பயோ பபுள் என்ற ஒன்றின் மூலமாக டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஆஸ்திரேலியாவில் 2021 ஆரம்பத்தில் தொடரை 2-1 என்று தொடர்ச்சியாக 2வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. இங்கிலாந்தில் அபாரமான ஆக்ரோஷத்துடன் ஆடிய இந்திய அணி முடிவுறாத தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

  இந்தியா-நியூசிலாந்து அணிகள் 2021-ல்தான் முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதின, இதில் இந்தியா பழம்பெருமை பேசி மண்ணைக்கவ்வ நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்களாயினர். கேன் வில்லியம்சன் தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை வென்றது நியூசிலாந்து.

  இந்த அணியில் ரோகித் சர்மா தொடக்க வீரர், அவருக்கு எதிர்முனையில் யார் என்றால் ஆச்சரியப்படுவீரர்கள், அது இலங்கையின் திமுத் கருணரத்னே. இதோடு ஜோ ரூட், கேன் வில்லியம்சன் இருக்கிறார்கள்.

  இன்னொரு ஆச்சரியமான வீரர் பாகிஸ்தானின் இடது கை வீரர் ஃபவாத் ஆலம். ரிஷப் பண்ட் இருக்கிறார், ஆனால் பாபர் ஆசமுக்கு இடமில்லை. கைல் ஜேமிசன், அஸ்வின் சரி, எதற்காக அக்சர் படேலை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. ஆண்டர்சன், ஷாகின் அஃப்ரீடி இருக்கிறார், அருமையாக வீசும் டிம் சவுதீ இல்லை பாட் கமின்ஸ் இல்லை. என்ன அணி இது?

  இந்த அணிக்கு ஆகாஷ் சோப்ரா கூறும் காரணம் என்னவென்பதைப் பார்ப்போம்: “ரோகித் சர்மாவுக்கு இந்த ஆண்டு மிகபெரிய ஆண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரமாதமாக ஆடினார். சென்னையிலும் இங்கிலாந்திலும் சதங்களை அடித்தார். இலங்கை வீரர் திமுத் கருணரத்னே எனது இன்னொரு தொடக்க வீரர். இவர் இரட்டைச் சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நன்றாக ஆடினார். அவர் அழகாக ஆடமாட்டார் என்றாலும் ரன் எடுக்கிறாரே.

  இதையும் படிங்க: Year Ender 2021: 2021-ல் அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி

  3வது இடத்துக்கு ஜோ ரூட்டை விட்டால் ஆளில்லை. 2021-ல் மற்ற வீரர்களை விட மைல்கணக்கில் முன்னிலை வகிக்கிறார். கேன் வில்லியம்சன் தான் நிச்சயம் கேப்டன், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார்” என்றார்.

  ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த 2021-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி இதோ:

  ரோகித் சர்மா, திமுத் கருணரத்னே, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் (கேப்டன்), பவாத் ஆலம், ரிஷப் பண்ட், கைல் ஜேமிசன், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷாஹின் அஃப்ரீடி.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Kane Williamson, Test cricket, YearEnder 2021