Home /News /sports /

Year Ender 2021- 2021- ஜோ ரூட்டின் ஆண்டு- டாப் 10 பேட்டர்கள்

Year Ender 2021- 2021- ஜோ ரூட்டின் ஆண்டு- டாப் 10 பேட்டர்கள்

  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :
    2021ம் ஆண்டு பேட்டர்களுக்கு அவ்வளவு நல்ல ஆண்டல்ல, பவுலர்கள் நன்றாக வீச உலகின் தலைசிறந்த தலைகளெல்லாம் பேட்டிங்கில் சொதப்பியதைத்தான் பார்த்தோம். ஆனால் உத்தி ரீதியாக பெட்டர் பேட்டர்கள் ரன்களை எடுக்க முடிந்தது. 2021-ன் டாப் 10 பேட்டர்கள் யார் என்று பார்ப்போம்.

    1. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்:

    டெஸ்ட் நம்பர் 1 பேட்ஸ்மென் ஜோ ரூட்.


    இது ஜோ ரூட்டின் ஆண்டு. 25 இன்னிங்ஸ்களில் 1544 ரன்கள். இந்த ஆண்டின் சராசரி 64.33. 6 சதங்களை எடுத்தார். இதில் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் இரட்டை சதம் விளாசினார். இந்த ஆஷஸ் தொடரில் பிரிஸ்பனில் 80 ரன்கள் எடுத்த ஜோ ரூட் நடப்பு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 62 ரன்களை எடுத்துள்ளார். ஆகவே இந்த ஆண்டின் நம்பர் 1 ரன் மெஷின் ரூட்தான்.

    2. ரோகித் சர்மா:

    ரோகித் சர்மா


    இந்தியாவின் புதிய ஒருநாள், டி20 கேப்டன், டெஸ்ட் துணைக்கேப்டன் ரோகித் சர்மா, இந்த ஆண்டின் சிறந்த தொடக்க வீரர். டெஸ்ட் மேட்ச்களில் 21 இன்னிங்ஸ்களில் ரோகித் 906 ரன்களை 47.68 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

    3. திமுத் கருணரத்னே:



    இலங்கையின் திமுத் கருண ரத்னே, இவரும் பிரமாதமான ஒரு பேட்ஸ்மென் தான், ஆனால் மீடியா வெளிச்சம் இல்லை. இவர் 13 இன்னிங்ஸ்களில் 902 ரன்கள். சராசரி 47.68.



    2021-ல் மேம்பட்ட அதிரடி விக்கெட் கீப்பர்- பேட்டர் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியா தொடரில் வெளுத்து வாங்கினார், சிட்னியில் ஏறக்குறைய இந்தியாவை 406 ரன்கள் வெற்றி இலக்கை எடுத்து வெற்றி பெறச் செய்திருப்பார், ஆனால் பிரிஸ்பனில் சாதித்தே காட்டி விட்டார். இந்த ஆண்டில் ரிஷப் பண்ட் 19 இன்னிங்ஸில் 706 ரன்கள் சராசரி 41.52.

    5. அபிட் அலி:



    பாகிஸ்தான் தொடக்க வீரர் அபிட் அலி. இவர் சீராக ஆடாவிட்டாலும் இவரை பாகிஸ்தான் அணியில் தக்க வைத்துள்ளது. துணைக்கண்டத்தில் தாதா. 15 இன்னிங்ஸ்களில் 695 ரன்கள் சராசரி 49.45.

    6. செடெஸ்வர் புஜாரா:

    புஜாராவின் நிக் நேம் ஸ்டீவ்.


    என்னது செடேஸ்வர் புஜாராவா? ஆமாம். இந்த ஆண்டில் 24 இன்னிங்ஸ்கள் ஆடி 686 ரன்கள் எடுத்துள்ளார் சராசரி அத்தனை நன்றாக இல்லை 29.82.

    7. மே.இ.தீவுகளின் கிரெய்க் பிராத் வெய்ட்:

    மே.இ.தீவுகளின் கிரெக் பிராத் வெய்ட் உண்மையில் புஜாராவை விட பெட்டர்தான். 20 இன்னிங்ஸ்களில் 675 ரன்கள் சராசரி 33.75. ஒரு சதம் அடங்கும்.

    8. லாகிரு திரிமானே:

    இலங்கையின் அதிகம் பேசப்படாத வீரர் லாகிரு திரிமானே. 7 இன்னிங்ஸ்கள் மட்டும் ஆடி 659 ரன்களை 50.69 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

    9. கைல் மேயர்ஸ்:

    இடது கை பேட்ஸ்மெனான இவர் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டைசத விளாசலில் தொடங்கினார். இது இவரது அறிமுக இன்னிங்ஸ். 20 இன்னிங்சில் 636 ரன்கள். 35.33 சராசரி.

    10. லிட்டன் தாஸ்:

    பங்களாதேஷின் விக்கெட் கீப்பர் பேட்டர் லிட்டன் தாஸ்2021-ல் 594 ரன்களை 12 இன்னிங்ஸில் 49.54 என்ற சராசரியுடனும் ஒரு சதத்துடனும் எடுத்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Joe Root, Rishabh pant, Rohit sharma, YearEnder 2021

    அடுத்த செய்தி