82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!

#YasirShah fastest to 200 Test wickets, breaks 82-year record | 9 டெஸ்ட் போட்டிகளிலேயே 50 விக்கெட் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் யாசிர் ஷா பெற்றுள்ளார். #PAKvNZ

news18
Updated: December 6, 2018, 5:46 PM IST
82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!
விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் யாசிர் ஷா (ICC)
news18
Updated: December 6, 2018, 5:46 PM IST
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா, சர்வதேச டெஸ்ட் அரங்கில் மிக விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் நடந்துமுடிந்த முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. 4-ம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா, நியூசிலாந்து அணியின் வில்லியம் சமெர்வில்லின் விக்கெட்டை எடுத்தபோது, டெஸ்ட் அரங்கில் தனது 200 விக்கெட்டைப் பதிவு செய்தார்.

Loading...
முன்னதாக, 1936-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த தென்னாஃப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னரான கிளாரி கிரிம்மெட், தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தினார். 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்த அவர், மிகக் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படித்திருந்தார்.

தற்போது, 82 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா, 33 டெஸ்ட் போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தி, முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன், 9 டெஸ்ட் போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார்.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்