1983 உலகக்கோப்பை: மிரட்டும் வெஸ்ட் இண்டீஸையே மிரட்டிப் பணிய வைத்த யஷ்பால் சர்மாவின் மறக்க முடியாத இன்னிங்ஸ்

யஷ்பால் சர்மா.

1983 உலகக்கோப்பைக்கு வருவதற்கு முன் இந்தியா 40 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12-ல் வெற்றி பெற்று 28-ல் தோல்வி அடைந்து மீன்குஞ்சு அணியாக இருந்த காலம். மே.இ.தீவுகளுக்கு எதிராக 4 போட்டிகளில் ஆடி 1-3 என்று இந்தியா பின்னடைவு கண்டிருந்தது.

  • Share this:
உலகக்கோப்பை 1983-க்கும் முன்பாக மே.இ.தீவுகள் தொடரில் பெர்பைஸில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47 ஓவர்களில் 282 ரன்கள் விளாசியது சினில் கவாஸ்கர் 90, கபில் தேவ் 36 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 82 ரன்கள். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது. இது அப்போது மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றியாகப் பார்க்கப்பட்டது. கிளைவ் லாய்ட் மே.இ.தீவுகள் அணியை எச்சரித்தார்.

இதன் பிறகுதான் மே.இ.தீவுகளுக்கு எதிரான அந்த 1983 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி நடந்தது. ஓல்ட் டிராபர்டில் மேட். பைபிளில் கூறப்படும் டேவிட்-கோலியாத் போட்டியாகும் இது.

இந்தப் போட்டியில் இந்திய டாப் 3-யான கவாஸ்கர், ஸ்ரீகாந்த், அமர்நாத் ஸ்டார்ட் கொடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 76/3 என்று ஆனது. நம்பர் 5-ல் இறங்கிய யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டீலுடன் கிரீசில் இணைந்தார். இருவரும் சேர்ந்து 49 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், பாட்டீல் 36 ரன்கள், கபில்தேவ் (6), ஆகியோர் விக்கெட்டுகளை லாரி கோம்ஸிடம் வெளியேற்ற இந்திய அணி 141/5 என்று ஆனது.

ஆனால் ரோஜர் பின்னியுடன் இணைந்த யஷ்பால் சர்மா ஆட்டத்தையே மாற்றும் 73 ரன்கள் கூட்டணியை அமைத்தார், பின்னி 27 ரன்கள் எடுத்தார். பெரிய பவுலராக இருந்த ஜொயெல் கார்னரின் கடைசி ஓவர்களை யஷ்பால் சர்மா பிரித்தார், 120 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய யஷ்பால் அதில் 9 பவுண்டரிகளை அடிக்க இந்தியா அணி 60 ஓவர்களில் 162/8 என்ற ஸ்கோரை எட்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு பின்னி, சாஸ்திரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி 228 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி கண்டது.

இது உலகக்கோப்பையில் கிழக்கு ஆப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு 8 ஆண்டுகள் சென்று கிடைத்த 2வது வெற்றி. அனைவரும் உலகக்கோப்பை என்றால் அரையிறுதி இறுதிப் போட்டையைப் பேசுவார்கள், கபில்தேவின் 175 நாட் அவுட்டை ஒன்றும் செய்ய முடியாது அனைத்து உலகக்கோப்பை இன்னிங்ஸ்களையும் தூக்கி சாப்பிட்ட இன்னிங்ஸ், ஆனால் யஷ்பாலின் இந்த இன்னிங்ஸ் பற்றி யாரும் பேசுவதில்லை, மிக மிக முக்கியமான வெற்றி. இந்திய அணியை மரியாதையுடனும் பயத்துடனும் பார்க்க வைத்த இன்னிங்ஸ் ஆகும் இது.
Published by:Muthukumar
First published: