Yashpal Sharma: அன்று திலிப் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த யஷ்பால் சர்மா இன்று இல்லை: திலிப் குமாரால் மாறிய யஷ்பால் சர்மாவின் வாழ்க்கை

யஷ்பால் சர்மா-திலிப் குமார்.

1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர் யஷ்பால் சர்மா இன்று மாரடைப்பினால் திடீர் மரணமடைந்தார். இவரது மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
    சமீபத்தில் மறைந்த பாலிவுட் பழம்பெரும் நடிகர் திலிப் குமார் இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கே திருப்பு முனை ஏற்படுத்தியவர். ஜூலை 7ம் தேதி திலிப் குமார் தன் 98வது வயதில் காலமானதையடுத்து திலிப் குமாரை நினைவு கூர்ந்த யஷ்பால் சர்மா இன்று நம்மிடையே இல்லை.

    யஷ்பால் சர்மா, திலிப் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனக்கும் அவருக்குமான உறவி நினைவு கூர்ந்தார்.

    Also Read: Yashpal Sharma | 1983 உலகக்கோப்பை சாம்பியன் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் திடீர் மரணம்

    அப்போது யஷ்பால் கூறியதாவது:

    திலிப் குமார் என் தந்தை போன்றவர். அவர் இறந்தது எனக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் யூசுப் கான் பாய் (திலிப் குமாரின் உண்மையான பெயர்). என் கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்தி என் வாழ்க்கையையே மாற்றியவர்.

    1974-75 உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் பஞ்சாபுக்கும் உத்தரப் பிரதேசத்துக்குமான ரஞ்சி கிரிக்கெட் நாக் அவுட் போட்டியை பார்க்க திலிப் குமார் டெல்லியின் மோகன் நார் மைதானத்துக்கு வந்தார்.

    Also read: 1983 உலகக் கோப்பையில் அவர் பேட் செய்த நினைவு அப்படியே உள்ளது : யஷ்பால் சர்மா இறப்புக்கு சச்சின், சேவாக் இரங்கல்

    நான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பஞ்சாபுக்காக ஆடும்போது சதம் எடுத்தேன். 2வது இன்னிங்ஸின் போது யாரோ ஒரு முக்கியஸ்தர், காரில் அமர்ந்திருக்கிறார், நாம் ஆடுவதை பார்க்கிறார் என்று அறிந்தேன். அவர் ஒரு பெரிய அரசியல்வாதியாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிறபாடு யூசுப் பாய் (திலிப் குமார்) என்னை அழைத்துப் பேசினார். என் சதத்தை பாராட்டினார். ’நீ அருமையாக ஆடினாய், உன்பெயரை நான் பரிந்துரை செய்கிறேன்’ என்றார். அடுத்த நாளே அவருடன் நான் இருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது.

    அதன் பிறகுதான் எனக்குத் தெரிந்தது யூசுப் பாய் என்னை ராஜ்சிங் துங்காப்பூரிடம் பரிந்துரை செய்துள்ளார். அவர் ராஜ்சிங்கிடம் நான் இந்தியாவுக்கு விளையாடத் தகுதியானவன் என்று கூறினார். அதன் பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது” என்றார் யஷ்பால் சர்மா.

    அதன் பிறகு யஷ்பால் சர்மா 37 டெஸ்ட், 42 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியது குறிப்பிடத்தக்கது அதில் உச்சம்தான் 1983 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றது.
    Published by:Muthukumar
    First published: