ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Yashpal Sharma | 1983 உலகக்கோப்பை சாம்பியன் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் திடீர் மரணம்

Yashpal Sharma | 1983 உலகக்கோப்பை சாம்பியன் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் திடீர் மரணம்

1983 உலகக்கோப்பை வீரர் யஷ்பால் சர்மா மரணம்.

1983 உலகக்கோப்பை வீரர் யஷ்பால் சர்மா மரணம்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கபில்தேவ் தலைமையில் 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது அந்த அணியின் முக்கியமான வீரருமான யஷ்பால் சர்மா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கபில்தேவ் தலைமையில் 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது அந்த அணியின் முக்கியமான வீரருமான யஷ்பால் சர்மா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

  66 வயதாகும் யஷ்பால் சர்மாவுக்கு திடீரென பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு மனைவி 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

  தேசிய அணித் தேர்வுக்குழுவில் இருந்துள்ளார் யஷ்பால் சர்மா 2011 உலகக்கோப்பையை இந்தியா மீண்டும் வென்ற போது அந்த அணியைத் தேர்வு செய்யும் குழுவில் அங்கம் வகித்தவர்.

  37 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய யாஷ்பால் சர்மா 1606 ரன்கள் எடுத்தார். இதில் 2 சதங்கள் 9 அரைசதங்கள், இதில் ஒரு சதம் இங்கிலாந்துக்கு எதிராக நம் சென்னை சேப்பாக்கத்தில் எடுத்தது, ஜி.ஆர்.விஸ்வநாத்துடன் பெரிய கூட்டணி அமைத்தார் யாஷ்பால் சர்மா.

  42 ஒருநாள் போட்டிகளில் 883 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 4 அரைசதங்கள் அடங்கும்.

  1983 உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்திலேயே கிளைவ் லாய்ட் தலைமை மே.இ.தீவுகளை வீழ்த்த யாஷ்பால் சர்மா அடித்த 87 ரன்கள் மிக முக்கியமானது. அதோடு அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இவரும் மொஹீந்தர் அமர்நாத்தும் அமைத்த கூட்டணி இந்திய வெற்றியை உறுடி செய்தது, இந்தப் போட்டியில் முழுதும் ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு ஸ்கொயர் லெக் மேல் அடித்த சிக்சரை மறக்க முடியுமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  1979-83-ல் இந்திய மிடில் ஆர்டரின் தூணாக இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 1978-ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சியில் ரயில்வேஸ், ஹரியாணா என 3 அணிகளுக்கு ஆடியுள்ளார். மொத்தம் 160 போட்டிகளில் 8,933 ரன்களை எடுத்துள்ளார் யஷ்பால் சர்மா, இதில் 21 சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் 201 நாட் அவுட்.

  இவரது திடீர் மரணம் இந்திய கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, கபில் தேவ், மதன்லால் உள்ளிட்டோர் இந்தத் திடீர் தகவலால் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, Team India