ஐசிசி-யிடம் WWE நிர்வாகி ராயல்டி கேட்ட விநோதம்!

#WWE's #PaulHeyman's cheeky tweet | தொடர் நாயகன் விருதை வென்ற தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது. #MSDhoni

ஐசிசி-யிடம் WWE நிர்வாகி ராயல்டி கேட்ட விநோதம்!
தோனி, பால் ஹேமன்
  • News18
  • Last Updated: January 19, 2019, 4:34 PM IST
  • Share this:
தோனியை புகழ்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி)  டபிள்யூ.டபிள்யூ.இ. (WWE) நிர்வாகி பால் ஹேமன் ராயல்டி கேட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது.

பின்னர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அந்நாட்டு மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதித்தது.


team india, இந்திய அணி
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (Cricket Australia)


முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அத்துடன், தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார். தோனியைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது. அதில், “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், ஐசிசி பதிவிட்ட ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு, டபிள்யூ.டபிள்யூ.இ நிர்வாகி பால் ஹேமன் ராயல்டி கேட்டுள்ளார். அவரது ட்விட்டரில், “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை தோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது. அதனால், எங்களுடைய ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியுள்ளார்.பால் ஹேமனின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் தோனி செய்த சாதனை!

Also Watch...

First published: January 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...