Home /News /sports /

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்பு

இந்திய அணி

இந்திய அணி

பாகிஸ்தான் - இலங்கை டெஸ்ட் தொடர் 1-1 என்று சமன் ஆன நிலையில் இலங்கை 3ம் இடத்துக்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்குக் கீழே 5ம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னும் 9 டெஸ்ட் தொடர்கள் மீதமுள்ளன, இதில் எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டி ரேசில் உள்ளன என்பதையும் 2023ம் ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்புள்ளதா என்பதையும் பார்ப்போம்:

மேலும் படிக்கவும் ...
    பாகிஸ்தான் - இலங்கை டெஸ்ட் தொடர் 1-1 என்று சமன் ஆன நிலையில் இலங்கை 3ம் இடத்துக்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்குக் கீழே 5ம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னும் 9 டெஸ்ட் தொடர்கள் மீதமுள்ளன, இதில் எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டி ரேசில் உள்ளன என்பதையும் 2023ம் ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்புள்ளதா என்பதையும் பார்ப்போம்:

    இலங்கை-பாகிஸ்தான் இறுதி வாய்ப்புகள்:

    இலங்கை அணி தற்போது 53.33% வெற்றி விகிதத்துடன் 3ம் இடத்தில் உள்ளது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இலங்கை 6 தொடர்களில் 5-ல் ஆடிவிட்டது. இருப்பது இன்னும் ஒரேயொரு தொடர்தான், அது நியூசிலாந்தில். அங்கு சென்று 2 டெஸ்ட்களிலும் இலங்கை வெல்ல வேண்டும், வென்றாலும் 61.1%இல் முடியும். ஆனால் 1-1 என்று தொடர் சமன் ஆனால் இலங்கையின் வெற்றி வீதம் 52.78 ஆக குறையும்.

    பாகிஸ்தான் 5ம் இடத்தில் உள்ளது, இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் நெரிசலான போட்டியில் உள்ளது. பாகிஸ்தானுக்கு பெரிய சாதகம் என்னவெனில் மீதமிருக்கும் இன்னும் 2 தொடர்களும் பாகிஸ்தானில் தான். இங்கிலாந்துக்கு எதிராக 3, நியூசிலாந்துக்கு எதிராக 2. இந்த 5டெஸ்ட்களிலும் வென்றால் பாகிஸ்தான் வெற்றி வீதம் 69.05 என்று எகிறும். அல்லது இந்த 2 தொடர்களிலும் 4 வெற்றி, 1 தோல்வி என்று 48 புள்ளிகள் பெற்றால் பாகிஸ்தான் வெற்றி சதவீதம் 61.09 ஆக இருக்கும்.

    இப்போது முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா இறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    தென் ஆப்பிரிக்கா இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் 71.43% உடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால் கடினமான தொடர்கள் மீதமுள்ளன, இப்போது இங்கிலாந்தில் 3 டெஸ்ட் பிறகு ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட். இது முடிந்தால் தங்கள் நாட்டில் வெஸ்ட் இண்டீஸுடன் 2 டெஸ்ட். வெஸ்ட் இண்டீஸை 2 டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தினாலும் கடைசி சதவீதம் 60 ஆக அவர்கள் கஷ்டப்பட வேண்டி வரும். இங்கிலாந்திடமும் ஆஸ்திரேலியாவிடமும் 1-2 என்று தோற்று, வெஸ்ட் இண்டீஸை 2-0 என்று வீழ்த்தினால் 60%- வெற்றி சதவீதத்தில் முடிவர். மாறாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு தொடரை 2-1 என்று வென்றும் இன்னொன்றை 1-2 என்றும் தோற்றால் 66.67% உடன் இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைக்கும்.

    ஆஸ்திரேலியா நிலவரம் என்ன?

    இந்த சுழற்சியில் 9 டெஸ்ட்கள் பாக்கி உள்ள ஒரே அணி ஆஸ்திரேலியாதான். இப்போது 70% வெற்றி வீதத்துடன் 2ம் இடத்தில் இருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த 9 டெஸ்ட்களில் 5 தங்கள் நாட்டில் ஆடுகிறது, 4 டெஸ்ட்கள் இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில், இது மிகமிக கடினமாக இருக்கும். உள்நாட்டில் ஆடும் 5 டெஸ்ட்களில் வெஸ்ட் இண்டீஸுடன் 2 டெஸ்ட், தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட். இப்படியிருக்க, உள்நாட்டில் ஆடும் 5 டெஸ்ட்களையும் ஆஸ்திரேலியா வென்று இந்தியாவுடன் 4 டெஸ்ட்களில் தோற்றாலும் அதன் வெற்றி விகிதம் 63.16% ஆக இருக்கும். இந்தியா தங்களுக்கு மீதமிருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவை 4-0 என்று வென்றால் ஆஸ்திரேலியாவைக் கடந்து பட்டியலில் முன்னேறும் அப்போது இந்தியாவுக்குத்தான் பெரிய வாய்ப்பிருக்கும். மாறாக 9 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா 6-3 என்று வெற்றி பெற்றால் அவர்களது வெற்றி விகிதம் 68.42 என்று இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசமாக்கும்.

    இந்தியா-பாகிஸ்தான் இறுதி வாய்ப்பு?

    இந்தியாவுக்கு 6 டெஸ்ட்கள் உள்ளன, 2 வங்கதேசத்துக்கு எதிராக 4.ஸ்திரேலியாவுக்கு எதிராக. இதில் வங்கதேச டெஸ்ட்கள் அங்கு நடக்கின்றன. இந்த 6 டெஸ்ட்டிலும் வென்றால் இந்தியா 68.06% பெற்று இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்தும். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இருக்கும் மீதமுள்ள டெஸ்ட்களில் அனைத்திலும் வென்றால் தென் ஆப்பிரிக்கா சரிந்து விட்டால் 2023-ல் இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டியை லார்ட்ஸில் கண்டு களிக்கலாம்.

    இங்கிலாந்துக்கு இன்னும் 6 டெஸ்ட்கள் உள்ளன, 6-லும் வென்றாலும் 51.52% தான் எடுக்க முடியும். நியூசிலாந்து 48.72% தான் அதிகபட்சம் வர முடியும். கொள்கை அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 65.38% எடுக்க முடியும், ஆனால் மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளும் தென் ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நடக்கிறது, எனவே இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வாய்ப்பு இல்லை என்றே கூறி விடலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: ICC World Test Championship, India vs Pakistan, Test match

    அடுத்த செய்தி