Home /News /sports /

WTC points table| ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை முந்திய தென் ஆப்பிரிக்கா

WTC points table| ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை முந்திய தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா முன்னேற்றம்

தென் ஆப்பிரிக்கா முன்னேற்றம்

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் இந்தியாவின் கனவு முடிவுக்கு வந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

    தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் இந்தியாவின் கனவு முடிவுக்கு வந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

    இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி கண்டது, தற்போதைய WTC தொடரில் அடுத்தடுத்து இழப்புகளுக்குப் பிறகு இந்தியாவின் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    தொடர்ச்சியாக இரண்டு அற்புதமான நான்காவது இன்னிங்ஸ் சேஸிங் மூலம், தென் ஆபிரிக்கா தொடரை வெல்லும் இந்தியாவின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டது. இரண்டாவது டெஸ்டில் கேப்டன் டீன் எல்கர் மற்றும் மூன்றாவது டெஸ்டில் கீகன் பீட்டர்சன் தலைமையில், தென்னாப்பிரிக்கா கடந்த இரண்டு வாரங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு சிறந்த ரன் சேஸ்களை செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் அட்டவணையில் தரவரிசையில் இந்தியாவை முந்தியது.



    2021-23 இல் இது தென்னாப்பிரிக்காவின் முதல் தொடராகும். மேலும் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வி மூலம் 24 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதாவது புள்ளிகள் சதவீதம் 66.67 என்று தென் ஆப்பிரிக்கா நான்காவது இடத்திற்கு உயர்ந்தது, சற்று கீழே பாகிஸ்தானின் 75.00 சதவீதத்துடன் பாகிஸ்தான் 3ம் இடத்தில் உள்ளது.

    செஞ்சூரியனில் நடந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வந்த ஒரே வெற்றியின் மூலம் தொடரில் இருந்து வெறும் 12 புள்ளிகளை இந்தியாவை பெற்றதையடுத்து தென்னாப்பிரிக்கா முந்தியது. நான்கு வெற்றிகள், மூன்று தோல்விகள் மற்றும் இரண்டு சமநிலையான ஆட்டங்களுடன் 49.07 என்ற சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திற்கு சரிந்தது இந்தியா.

    இலங்கை தனது 100% என 2 ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது, அதே அதே நேரத்தில் நடந்து வரும் ஆஷஸ் தொடரில் 3-0 என முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா, தற்போது மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு ட்ரா ஆட்டத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இலங்கைக்கு எதிராக, சொந்த மண்ணில் ஒரு தொடர் நடைபெறவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தங்களது நிலையை அதிகரிக்க குழிப்பிட்ச்களை போட்டு வீர தீரத்தைக் காட்டலாம். அட்டவணையின் முதல் பாதியில் தங்கள் நிலையை உறுதிப்படுத்தவும் சில வெற்றிகளை பெற முனைப்புடன் போராடும். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆண்டு ஜூலையில் எட்ஜ்பாஸ்டனில் ஒரு இறுதி முறையாக இரு அணிகளும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது, ​​தொடரை வெற்றியுடன் முடிக்க விரும்பும் ஆனால் அதுவும் இந்த பேட்டிங்கை வைத்துக் கொண்டு நிச்சயம் கடினம்தான்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa

    அடுத்த செய்தி