Home /News /sports /

இந்திய அணியைக் காப்பாற்றிய மழை: மைக்கேல் வான் கிண்டலும் நெட்டிசன்களின் அபத்த ஆவேசமும்

இந்திய அணியைக் காப்பாற்றிய மழை: மைக்கேல் வான் கிண்டலும் நெட்டிசன்களின் அபத்த ஆவேசமும்

மைக்கேல் வான்.

மைக்கேல் வான்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மழை அடிக்கடி குறுக்கிட்டு ஆட்டம் டிரா ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் ‘இந்தியாவை மழை காப்பாற்றியது’ என்று கிண்டல் செய்திருந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மழை அடிக்கடி குறுக்கிட்டு ஆட்டம் டிரா ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் ‘இந்தியாவை மழை காப்பாற்றியது’ என்று கிண்டல் செய்திருந்தார்.

அந்தக் கிண்டலுக்கு இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், ஆமிர் கான் நடித்த லகான் திரைப்படத்தின் ஒரு காட்சியை பதிவிட்டு அதன் மேல் இங்கிலாந்தின் மற்ற வீரர்கள் பைனலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று வாசகம் இட்டுள்ளார். இது வைரலானது.

மைக்கேல் வான் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டை சீண்டி வருகிறார், விராட் கோலி போல் கேன் வில்லியம்சன் இந்தியராக இருந்திருந்தால் அவர்தான் நம்பர் 1 என்று விராட் கோலியின் சாதனைகளை அவர் கிண்டல் செய்தார். விராட் கோலியை சிறந்த பேட்ஸ்மென் இல்லை என்று கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது, என்று கிண்டல் செய்தார். இந்திய ஊடகங்களை கிண்டல் செய்தார்.

அவர் கூறுவது ஒரு விதத்தில் உண்மைதான், நம் ரசிகர்களின் கோலி வெறி, தோனி வெறி கிரிக்கெட் மதிப்பீடுகள் சார்ந்ததல்ல. அதையும் தாண்டிப் புனிதமான நாயக வழிபாடு சார்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் இந்திய ரசிகர்களும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள், இதனால் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

Also Read: ஜேமிசனை ஆடத் தெரியாமல் 71 ரன்களில் 7 விக். பறிகொடுத்த இந்தியா! இந்திய பேட்ஸ்மென்கள், பவுலர்கள் திணறல்: நியூசிலாந்து ஆதிக்கம்

இந்நிலையில் மைக்கேல் வான் கிண்டலுக்கு வாசிம் ஜாபர் லகான் பட புகைப்படத்தை வெளியிட்டு அடுத்து இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் இருப்பதால் டெஸ்ட் போட்டியை அவர்கள் ஆவலுடன் பார்க்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி லகானில் ஆமிர் கான் டீம் வெல்லுமே அதைப்போல் இந்தியாவும் இங்கிலாந்தை அங்கு வெல்லும் என்பதை சூசகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் வாசிம் ஜாபர்.

ஆனால் மற்ற நெட்டிசன்கள் இங்கிலாந்தை இங்கு குழிபிட்சைப் போட்டு வீழ்த்தியதை பெரிய வெற்றி போல் ஸ்கார்கார்டை போட்டு வானைக் கிண்டல் செய்துள்ளனர்.

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் இங்கிலாந்தை 5-0 தோல்வியிலிருந்து மழை கூட காப்பாற்றாது என்று வான் கிண்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். ஆனால் இந்தியா நேற்று ஆடியதை பார்த்துவிட்டு, இந்திய பவுலிங்கின் போதாமையைப் பார்த்து விட்டு மைக்கேல் வானைக் கிண்டல் செய்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

இங்கிலாந்து பிட்சில் இந்திய அணியின் கடந்த கால லட்சணங்களை அறியாமல் இன்னும் சில நெட்டிசன்கள் மிக அபத்தமாக, இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் பயமில்லாமல் ஆடலாம் ஏனெனில் கெவினோ பிரையன் ரிட்டையர் ஆகிவிட்டார் என்று பதிவிட்டுள்ளனர். இடையே தேவையில்லாமல் பாகிஸ்தானையும் வம்புக்கிழுத்து பாகிஸ்தான் இப்போது ஜிம்பாப்வே போன்ற அணிகளுடன் ஆடுவது போல் இங்கிலாந்து பங்களாதேஷ், அயர்லாந்துடன் ஆட வேண்டும் என்று அபத்தமாக கேலி செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் நியூசிலாந்து இப்போது பெரிய அணி என்ற சிந்தனையில்லாமல் நியூசிலாந்திடம் தோற்ற இங்கிலாந்து, மகாபெரிய இந்திய அணிய வீழ்த்த முடியுமா? என்று மைக்கேல் வானுக்கு அபத்தமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்க வேண்டும், அதன் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும், என்ற ஆர்வம் இந்த தலைமுறையினருக்கு இல்லாததும், ஒருநாள், டி20 கிரிக்கெட்டையே பார்த்து அதுதான் கிரிக்கெட் என்றும் நினைப்பதால்தான்  இப்படிப்பட்ட அபத்த பதில்களை அளித்து வருகின்றனர்.

இந்தத் தலைமுறை இந்திய நெட்டிசன்கள் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தி நிதானமாக கிரிக்கெட் ஆட்டத்தின் பல வண்ணங்களை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் கோரிக்கை. இதுதான் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.
Published by:Muthukumar
First published:

Tags: ICC World Test Championship, India Vs England, Test cricket

அடுத்த செய்தி