• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து விராட் கோலி, ரவி சாஸ்திரி பேசிய ஆடியோ லீக்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து விராட் கோலி, ரவி சாஸ்திரி பேசிய ஆடியோ லீக்

விராட் கோலி - ரவி சாஸ்திரி

விராட் கோலி - ரவி சாஸ்திரி

விராட் கோலி, ரவி சாஸ்திரி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது நேரலை என்று தெரியாமல் அவர்கள் பேசி கொண்ட ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதி போட்டி  ஜூன் 18 முதல் 22 வரை சவுத்தாம்ப்டனில் நடைபெற உள்ளது. முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல இந்தியா, நியூசிலாந்து இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது.

    உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதி போட்டிக்கு தன்னை தயார் படுத்தி கொள்ள நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி இங்கிலாந்து சென்ற பின் தனது தனிமைப்டுத்தலை முடித்து கொண்ட பின் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து இருவரும் பேசி கொள்ளும் ஆடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. அதில், நாம் அவர்களை விக்கெட் சுற்றி பந்து வீசுவோம். இடது கை பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். முகமது ஷமி, சிராஜ் என அனைவரையும் துவக்கத்திலிருந்தே களத்தில் இறக்கி விடுவோம் என்று கூறும் ஆடியோ தான் அது. விராட் கோலியின் இந்த ஐடியாவை சம்மதிப்பது போல் ரவிசாஸ்திரியும் தலை ஆட்டினார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.



    இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ரவி சாஸ்திரி, வரும் ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது, இனி இறுதிப் போட்டி 3 ஆட்டங்கள் இருந்தால் நல்லது என்றார். கேப்டன் விராட் கோலியும் ரவி சாஸ்திரியின் கருத்துக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: