• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இது என்ன உங்கள் இஷ்டத்துக்கு அடித்துத் துவைக்கும் இந்திய ஆட்டக்களமா ரிஷப் பந்த்?- லஷ்மண் அறிவுரை

இது என்ன உங்கள் இஷ்டத்துக்கு அடித்துத் துவைக்கும் இந்திய ஆட்டக்களமா ரிஷப் பந்த்?- லஷ்மண் அறிவுரை

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

தவற்றை திருத்திக் கொள்ள ரிஷப் பந்த் பொறுமையும் நிதானமும் காக்க வேண்டும் என்கிறார் விவிஎஸ் லஷ்மண்.

  • Share this:
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பந்த் 1 ரன் எடுக்க 20 பந்துகள் எடுத்துக் கொண்டார், ஆனால் இதே பொறுமையைக் கடைப்பிடிக்காமல் ஒரு ஷாட்டை தவறாக ஆடி ஆட்டமிழந்தார், இந்தத் தவற்றை திருத்திக் கொள்ள ரிஷப் பந்த் பொறுமையும் நிதானமும் காக்க வேண்டும் என்கிறார் விவிஎஸ் லஷ்மண்.

    ரிஷப் பந்த் 20 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்தார் என்பதை விட அந்த 20 பந்துகளில் 10-13 பந்துகள் அவர் கால்காப்பில் வாங்கினார், பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆவது அவரது அன் ஆர்த்தடாக்ஸ் ஆட்டத்துக்கு சரிப்படாது. இங்கிலாந்தில் ஸ்விங் ஆகும் போது நிதானமும், கட்டுக்கோப்பும், பொறுமையும் தேவை என்று கூறியுள்ளார் விவிஎஸ் லஷ்மண்.

    இதையும் படிக்கலாமே: இந்திய அணியைக் காப்பாற்றிய மழை: மைக்கேல் வான் கிண்டலும் நெட்டிசன்களின் அபத்த ஆவேசமும்

    ஸ்டார் ஸ்போர்ட்ஸிற்காக லஷ்மண் கூறியது:

    ரிஷப் பந்திற்கு இங்கிலாந்தில் என்ன சவால் காத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர் இயல்பாகவே ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். இந்த மாதிரி ஆடுகளங்களில் எச்சரிக்கையுடன் ஸ்ட்ரோக் ப்ளேயையும் கலந்து ஆட வேண்டும்.

    பவுலர்களை எந்தெந்தப் பகுதிகளில் அடிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொறுமையையும் கட்டுக்கோப்பையும் விட்டு விடுதல் கூடாது.

    துணைக்கண்ட பிட்ச்கள் போல் பேட்டை இங்கு தாறுமாறாக சுழற்ற முடியாது ரிஷப் பந்த். ஆனால் இதைத்தான் ரிஷப் பந்த் செய்வார் என்பதை எதிர்பார்ப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் அவர் நிச்சயம் கற்றுக் கொள்வார். அவர் அவுட் ஆகிச் செல்லும் போது தன் மீதே கடும் ஏமாற்றமும் கோபமும் அடைந்ததைப் பார்த்தோம். அவர் அந்தப் பந்தை ஆடியிருக்கக் கூடாது, அதை அவர் ஆடாமல் விட்டிருக்க வேண்டும்.

    இங்கு ரிஷப் பந்த் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட சரியான தருணம். ஆஸ்திரேலியாவில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது போல் இங்கும் அவர் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா வேறு இங்கு வேறு. இங்கு நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். குறிப்பாக பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தும் போதும் பந்துகள் ஸ்விங் ஆகும் போதும் நிதானித்து பிறகுதான் அடித்து ஆட முடியும்.

    இவ்வாறு கூறினார் லஷ்மண்.

    இந்திய அணி 71 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களுக்குச் சுருண்டது, கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்து தன் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது, கேன் வில்லியம்சன் 12 நாட் அவுட். ராஸ் டெய்லர் இன்னும் ரன் எடுக்கவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: